ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் அமோகமாக வந்து விடுவார்கள். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது நடக்கப் போகும் குரு பெயர்ச்சி 12 ஆண்டுகுளுக்கு பின் கடக ராசியில் நடக்கப் போகிறது. இந்த ஆண்டின் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் குரு பகவான், தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்லும் ஆசை நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்ப உறவுகள் இனிமையாக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சம்பள உயர்வுடன் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். மூதாதையர் சொத்துக்களைப் பெறலாம். வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தத்தைப் பெறலாம். நிதி நிலைமை வலுவடையும். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படலாம். மன அமைதி கிடைக்கும். மதச் செயல்களில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை பெறலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மரியாதை கிடைக்கக்கூடும். ஆரோக்கியம் முன்பை விட மேம்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். புதிய வாகனத்தை வாங்கலாம். உங்கள் மனம் மகிழ்ச்சியடையச் செய்யும். நீண்ட கால முதலீடுகளைச் செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு!!


