ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். அந்த வகையில் ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி ஞான காரகரான புதன் கடக ராசிக்கு செல்கிறார். புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இணக்கம் உண்டாகும். நிதி நிலையை வலுவாக்க நல்ல வாய்ப்புகளை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செயல் திறன் அதிகரிக்கும். உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினரிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். ஆடை, அலங்காரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
கடகம்

அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். பொறுமையும் நிதானமும் கை வந்து சேரும். குடும்பத்தில் அன்பு பெருகும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றுலா செல்வீர்கள். பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் காதல் கைகூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
கன்னி

வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். செல்வ செழிப்பு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் வாய்க்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போது மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
விருச்சிகம்

பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். செல்வாக்கு மிக்க நபர் மூலம் காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். பணியிடத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள முடியும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான துணை கிடைக்கும்.
மகரம்

இது நாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். வருமான ஆதாரம் பெருகும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குழந்தையில்லாத இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றியை பெறப்போகும் சில ராசிகள்!!


