ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் கன்னி ராசியில் சந்திக்க கூடிய தனயோகம் நிறைந்த நன்னாளில், மாலை நேரத்தில் சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைய உள்ளார். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெற்றிருந்தாலும், அவர் தற்போது வக்ர பெயர்ச்சியை மேற்கொள்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் அற்புதமும், செல்வ செழிப்பும் ஏற்படப்போகிறது.
மிதுனம்

மிதுன ராசிக்கு கர்ம ஸ்தானத்தில் சுக்கிரனின் உதயம் நடப்பதால், நீங்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயத்தில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். அவர்களுடன் நேரத்தை செல்ல விட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சரியான வழியில் சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவும் முடியும். மன வலிமை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள்.
கடகம்

சுக்கிர பகவான் உதயமாகக்கூடிய பங்குனி மாதத்தில், மார்ச் 23ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு செல்வமும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கப் போகிறது. உங்களுக்கு வேலை, தொழில் தொடர்பாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரமும், அதில் நன்மைகளும் அடைவீர்கள். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான சூழல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். புதிய திட்டங்களுடன் உங்கள் வேலையை செய்யவும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் காரணமாக பல விதத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கும்ப ராசிக்கு தன ஸ்தானத்தில் நடக்கும் இந்த நிகழ்வால் நிதி நிலை ரீதியாக லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். அரசு வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் குடும்ப வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் உறவில் பரஸ்பர அன்பு மற்றும் புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : ஒரே நாளில் ஏற்பட போகும் சூரியப் பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் பொற்காலத்தை பெறப்போகும் சில ராசிகள்!!




