இன்று நடக்கும் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகார்கள் யார் தெரியுமா ?

- Advertisement -

சூரிய கிரகணத்திற்கு பிறகு வானில் நடக்கும் மாற்றம் ராசிகளில் ஏற்படுத்தும் தாக்கம். மாகாளய அமாவாசை தினத்தன்று நடைபெறும் சூரிய கிரகணம் இந்த ஆண்டின் இறுதி சூரியகிரகணம். வருடத்தில் மூன்றிலிருந்து நான்கு சூரிய கிரகணங்கள் வரை நடைபெறும். அப்படி இந்த ஆண்டின் கடைசி கிரகணம் கன்று மாகாளய அமாவாசை தினத்தன்று நடைபெற இருக்கிறது. சூரிய கிரகணம் என்பது சூரியன் , சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். ஆனால் முழுவதுமாக சூரியனை சந்திரனால் மறைக்க இயலாத. சந்திரனை சுற்றி சூரியனின் ஒளிவட்டம் தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.

-விளம்பரம்-

அப்படி பார்த்தால் கண்கள் சேதமடையும். காரணம் சூரியனிலிருந்து வரும் புற ஊதாகதிர்களினால் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த முறை ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. சூரிய கிரகணம் சந்திர கிரகணங்களை எவ்வாறு அழைப்பார்கள் என்றால் ராகு சூரியனை விழுங்குவதாக கூறுவார்கள். இந்த சூரிய கிரகணத்தின் போது ராசிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படி என்ன ராசிகளுக்கு அனுகூல பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம். சூரிய கிரகணம் மகாளய அமாவசை நாளான இன்று ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாத ஆகையால் நாசாவின் நேரடி ஒளிபரப்பில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.இந்த சூரிய கிரகணம் எந்தெந்த ராசிகளில் எந்த மாதிரியான மாற்றத்தை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நல்ல பல நன்மைகளை அளிக்க இருக்கிறது. இதுவரை இவர்களுக்கு இருந்த பண பிரச்சனைகளை எல்லாம் தீர போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் நடைபெற இருக்கிறது. இதுவரை வாழ்வில் ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் உங்களுக்கு வெற்றி படிகளாக மாற இருக்கின்றன. சுற்றத்தார் மத்தியிலும் அண்டையலார் மத்தியிலும் உங்களுக்கு நல்ல நன்மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை மதிக்காதவர்கள் கூட இனி உங்களை நல்ல மதிப்புடன் நடத்துவார்கள். மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இந்த மாகாளைய அமாவாசையில் நடைபெற இருக்கும் சூரிய கிரகணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமான பல நன்மைகளை கொடுக்க இருக்கிறது. செய்யும் வேலை கடினமாக இருந்தாலும் நீங்கள் உழைக்கும் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய சிறிய வாய்ப்பு கூட வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்களை கொடுக்கும். ஆகையால் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வேண்டாம் என்று ஒதுக்கி விடாதீர்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பணியாற்றும் இடங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் உழைப்பிற்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இந்த சூரிய கிரகணத்தால் உங்களுக்கு மிகப்பெரிய நல்ல வாய்ப்புகள் தேடி வர இருக்கிறது. இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி இருந்த வாழ்க்கை இனி முன்னேற்றத்தை நோக்கி நகரப் போகிறது . வேலையில் மிக அதிக அளவு முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்ல துவங்க இருக்கிறீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். சுப செலவுகள் நடைபெறும். மனதில் நிறைய மகிழ்ச்சிகளை அள்ளி கொண்டு செல்ல இருக்கிறீர்கள்.

-விளம்பரம்-