Home ஆன்மிகம் சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு செல்லும் புதன், இந்த ராசிகளின் நிலைமை இனி மோசம் தான்!

சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு செல்லும் புதன், இந்த ராசிகளின் நிலைமை இனி மோசம் தான்!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏற்படுத்தக் கூடும். ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் பத்து டிகிரி வட்டத்துக்குள் வரும்போது எரிப்பு நிலை ஏற்படும். அதாவது, சூரியனை நெருங்கும் கிரகத்தின் சக்திகளை சூரியன் மட்டுப்படுத்திவிடும். அப்போது சூரியனின் சக்தி மட்டுமே எடுபடும், பிற கிரகங்களின் நன்மையை ஜாதகர்கள் பெறமாட்டார்கள். புதன் எரிப்பு நிலையால் யார் அரசுப் பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷபம்

பண வரத்து குறைவது, குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு போன்ற சிக்கல்களை ரிஷப ராசியினர் எதிர்கொள்ளலாம். வேலையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தொழிலும், பணியிடத்திலும் சிக்கலை அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனம் குழப்பமாகவே காணப்படும். எனவே, அனைத்து விஷயத்தையும் சிந்தித்து செய்வது நல்லது. கோபத்தால், கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் சிலருக்கு காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயன்றாலும், ஏதேனும் காரணத்தால் தடைபடும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றும். முடிந்த அளவு வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது. உங்கள் தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு செய்யும் பணியில் அதிருப்தி ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பிறரின் ஆலோசனையை கேட்டு எடுக்கவும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நடைபெறமால் போகலாம். வசதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் சிறு சிறு தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால், சிம்ம ராசியினரின் மனதில் மனக்கிலேசம் உண்டாகும், பழைய நினைவுகள் வந்து மனதை அரித்து கவலைகளை அதிகரிக்கும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. பாட்னர்ஷிப் மூலம் தொழில் செய்பவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

-விளம்பரம்-

மகரம்

மகர ராசிக்காரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வுகள் இருந்தால்கூட அது மனதில் சரியான நேரத்தில் தோன்றாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இருந்த அமைதி குறையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களில் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு புதன் எரிப்பு நிலையில் இருக்கும்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் அல்லது சொத்து சம்மந்தமாக ஏதாவது திட்டமிடுகிறீர்கள் என்றால், அதை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது. உங்கள் வார்த்தை மீதி அதிக கவனம் வைக்கவும். வெளியில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலத்தை அடையப்போகும் சில ராசிகள்!

-விளம்பரம்-