சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிர நிலையில் செஞ்சாரம் செய்து வருகின்றார். ஜோதிடத்தின் படி குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி ரிஷப ராசிகள் பிற்போக்கு பயிற்சி ஆன வக்ர நிலையை அடைந்துள்ளார். பிப்ரவரி நான்காம் தேதி வரையில் குரு பகவான் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்வார் எனவே இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும் ஒரு சிலர் ராசிக்காரர்களுக்கு குருவின் தாக்கத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர இயக்கம் சாதகமான பல சூழ்நிலைகளை கொடுக்கக்கூடியது. நீங்கள் செய்யக்கூடிய வேலை மற்றும் வணிக விவகாரங்களில் உங்களுக்கு ஏற்ற முன்னேற்றமும் உங்களுக்கு ஏற்ற பாராட்டும் கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்களுடைய வருமான உயர்வினால் நீங்கள் புதியதாக வீடு வாகனம் போன்றவை வாங்குவீர்கள் உங்களுடைய குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் நல்ல காலமாக இது அமையும். தொழில் செய்யக்கூடியவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்கும் விருக ஸ்தானமான 12ஆம் இடத்தில் குரு பகவானின் வக்ர நிலை அமைகிறது. எனவே குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் முதல் வருமான வாய்ப்புகள் கிடைக்கும் செலவுகள் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் அதனால் அதிகமாக பணத்தை சேமிக்க முடியும். புதிய வேலை தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலம் பல உதவிகள் நிச்சயமாக கிடைக்கும் தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் குருவின் வக்ர நிலை உள்ளதால் பணம் தொடர்பான கஷ்டங்கள் நீங்கும் மேலும் பணம் அதிகமாக சேருவதற்கான வாய்ப்புகளும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி நிம்மதி என அனைத்துமே நிறைந்து காணப்படும். வியாபார ரீதியாக இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் என்ன காரியம் செய்தாலும் அதன் முன்னேற்றம் பெறுவீர்கள். உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும் எனவே வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடியும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் அமைப்பானது மிகவும் சாதகமானதாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்துமே நிறைந்திருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். காதல் உறவில் புரிதல்கள் அதிகரித்து குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல ஒரு சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற விவகாரங்கள் கைகூடி வரும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த வக்ர நிலை பலவிதத்தில் நன்மைகளைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஆன்மீக பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அதில் முன்னேற முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் அமைப்பானது பல சாதகமான அமைப்பை கொடுக்கும். உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும் சமுதாயத்தில் நல்ல பெயரும் கிடைக்கும். சமூக ஆர்வத்துடன் இருப்பீர்கள். மதிப்பு மரியாதை சமுதாயத்தில் அதிகரித்து குடும்பத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.
இதனையும் படியுங்கள் : சதயம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வதால் சுப பலன்களை பெறப்போக்கும் 6 ராசிகள்!


