தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாகி சஞ்சரிக்கக்கூடிய காலம் தை மாதம் ஆகும். சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தை மாத பிறப்பு மகர சங்கராந்தியாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், செவ்வாய்க்கு உகந்த மங்கள வாரத்தில், பூச நட்சத்திரமும் சேருவது, மிகவும் மங்களகரமான சேர்க்கை என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த தை மாதம் பிறக்கக்கூடிய ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி முதல் ஒரு மாத காலத்தில் சூரிய பகவான் குருவுக்கு 9ம் வீட்டிலும், குரு சூரியனுக்கு 5ம் வீட்டிலும் இணைந்து ஒரு சிறப்பு யோகத்தை உருவாக்கினர். அதுவே நவ பஞ்சம ராஜயோகம். இது முக்கியமான நான்கு ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாகும். தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சம யோகம் காரணமாக ஜாக்பாட் பலன்களை பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
தை மாதத்தில் உருவாகும் நவபஞ்ச யோகத்தால், விருச்சிக ராசியினருக்கு எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நிதி முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் முதலீடு செய்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட கால நிதி தகராறுகள் தீர்க்கப்படும். ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
தை மாதத்தில் உருவாகும் நவபஞ்சம் யோகத்தால், தனுசு ராசியினரின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். உங்களின் தலைமைப் பண்பு அதிகரிக்கும். இந்த மாதத்தில் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். உங்கள் வேலையில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க அல்லது முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
மகரம்
தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சமயோகத்தால், மகர ராசியினருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த முடிவையும் சிறப்பாக எடுப்பீர்கள். வேலையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் மன உறுதி அதிகரிக்கும். எல்லா பொறுப்புகளையும் சரியாக செய்து முடிக்க முடியும். உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவர். அரசு வேலை கிடைக்க பொன்னான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
மீனம்
தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சமயோகம் காரணமாக மீன ராசியினரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும்.உறவினர்கள் நண்பர்களின் பெயர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் லாபம் உண்டாகும். உங்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். உங்கள் நிதி நிலை வளர்ச்சியும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து பதவி உயர்வு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் சில ராசிகள்!!