நவம்பர் 15ஆம் தேதி சனிபகவான் அவருடைய கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடையப் போகிறார். எனவே ஒரு சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையும். சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் ஒரு சில ராசிகளுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் மேலும் இதனால் ஷஷ ராஜ யோகத்தின் பலனும் கூட அதிகரிக்கும். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் வேலை பார்க்கும் இடத்தில் உயரத்தை அடைவார்கள் நல்ல சம்பள உயர்வை பெறுவார்கள். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் அமோகமாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் பாராட்டையும் ஆதரவையும் பெற்று வேலையில் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். மொத்தத்தில் சனியின் இந்த வக்ர நிவர்த்தியால் உங்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசி காரர்களுக்கு இந்த நிவர்த்தி பொருளாதார நிலையை மேம்படுத்தும். கடன் பிரச்சினைகளை குறைத்து பணவரவை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் மேலும் நீதி மன்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைத்து சாதகமாக அமையும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் ஏற்படும் ஷஷ ராஜ யோகத்தால் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்து அதன் மூலம் பல நல்ல பலன்களையும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க நினைத்தால் இந்த காலத்தில் செய்யுங்கள் நிச்சயமாக தொழிலில் வெற்றி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சனி மற்றும் ராகு பகவான் கொடுக்கக்கூடிய நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!