அசுரர்களுடைய குரு என்று அழைக்கப்படக்கூடிய ஒன்பது கிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக கருதப்படுவது தான் சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவானின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையும் பாதித்தாலும் ஒரு சிலருக்கு நல்லதையும் கொடுக்கும். செல்வத்தையும் செழிப்பையும் தரக்கூடிய சுக்கிர பகவான் ஜனவரி 17ஆம் தேதி காலை 7:51 மணிக்கு ராசி மாற்றம் அடையப்போகிறார் எனவே ஒரு சிலர் ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது. ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதன் ராசியை மாற்றும் அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் சனிபகவான் மற்றும் புதன் சேர்க்கை நடக்கப்போவதால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

செல்வத்தை அள்ளித் தரக்கூடிய சுக்கிர பகவான் பூர்வ பாத்திர பாதத்தில் நுழைந்து இந்த ராசியின் 11 வது வீட்டில் தங்கப் போவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த துறையில் என்ன செய்தாலும் அதில் வெற்றியையும் பணவரவையும் பார்க்க முடியும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த நேரமாக அமையும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும். குடும்பத்தோடு நேரத்தை செலவிட இது உகந்த காலமாக அமையும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் குரு ராசிக்குள் நுழைவது நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் எல்லா துறைகளிலும் எல்லாவற்றையும் பெறலாம். ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால் இந்த ராசிகளுக்கு நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு அதிஷ்டத்துடைய முழு ஆதரவும் கிடைக்கும். சுக்கிர பகவானுடைய அருளால் வெளிநாடு பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்விக்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் சகோதர சகோதரிகளுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் அருளால் நீண்ட காலமாக தடைபட்டு வந்த அனைத்து வேலையும் முடிவடையும். மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். பெற்றோருடன் நல்ல உறவுகளை ஏற்படுத்த முடியும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் சில ராசிகள்!!


