ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். அந்த வகையில் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவானும், கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவானும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் இணைவதால் உருவாகும் குரு ஆதித்ய யோகம், ஜோதிடத்தில் மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சேர்க்கை காரணமாக சில ராசிகள், மிகுந்த பலனை அடைவார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்

வேலையில் கல்வியில் வெற்றிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். திடீர் ஆதாயம் நிதி நெருக்கடியை போக்கும். உங்கள் புத்தி சாதுரியம் காரணமாக, சவால்களை எல்லாம் சிறப்பாக எதிர்கொள்வீர்கள். முதலீடுகளிலிருந்து லாபம் இருக்கலாம், பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நேரமும் இது. மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்

வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்கள் பதிவு உயர்வு பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவு படுத்துவார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. முதலீடு செய்வதன் மூலம் மிகப்பெரிய நன்மைகளை பெறலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் அதிகரிக்கும். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட இது சரியான நேரம். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் தேடி வரும். அதனை பயன்படுத்திக் கொண்டால் நிலையை அடையலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்கள் திறமை பாராட்டுவார்கள். செல்வாக்கு உள்ள நபர்களின் தொடர்பு காரணமாக பெருத்த ஆதாயம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு உண்டு. பெரிய முதலீடுகள் செய்யும் யோசனை உங்களுக்கு நன்மை பயக்கும். மன அமைதியும் உடல் நிலையும் மேம்படும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
மகரம்

எதிர்பாராத நல்ல செய்தி உங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கும். உடல் நல பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். திருமண வாழ்க்கையில் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.
கும்பம்

அதிர்ஷ்டத்துக்கு குறைவிருக்காது. பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இது உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய வாய்ப்புகளை எதிர்கொள்வீர்கள். பழைய முயற்சிகள் நல்ல பலன் தரும். உங்கள் பணி பாராட்டப்படும், மேலும் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் தலைவிதி மாறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!


