2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த புத்தாண்டில் சனி மீன ராசிக்கும், குரு மிதுன ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில், குரு பகவானுக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் 1 1/2 ஆண்டுகள் ஆகும். கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள் என பல வித சுப விஷயங்களுக்கு குரு பகவான் காரணி கிரகமாக இருக்கிறார். இவர் 2025 மே 14 அன்று மிதுனத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் காரணமாக 12 ராசியை சேர்ந்தவர்கள் மீதும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். முயற்சி செய்யும் அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும். பொன், பொருள் என அனைத்து செல்வங்களும் சேரும். திடீர் பண வரவு, பொருளாதார மேம்பாடு உண்டாகும். தொழில், அலுவலக வேலைகளில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.
கடகம்

குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் நினைத்ததைவிட லாபம், வருமானம் அதிகரிக்கும். இலக்குகளை சரியாக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலைகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு முடிப்பீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகம் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ் வந்து சேரும்.
துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து வெற்றி காண்பீர்கள். வேலைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். காதலர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த வேலைகளில் தொடர்ந்து வெற்றியைக் காண்பீர்கள்.
தனுசு

2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் இருக்கும். பல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் இருக்கலாம். மாணவர்களுக்கு போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கும்பம்

குரு பகவானின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வேலைக்கான தேடல் முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபரத்தில் பங்குதாரர்களின் உதவியால் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகமாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியுடன் வாழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!


