ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன் உள்ளது. அவை 12 வீட்டில் எந்த இடத்தில் அமர்ந்தாலும் அதனால் சிலர் தனிப்பட்ட பலன்கள் கிடைக்கும் அந்த வகையில் ரிஷப ராசியில் குரு பகவான் அக்டோபர் மாதத்தில் இருந்து வக்கிர நிலை அடைந்துள்ளார். மேலும் நவம்பர் 26 ஆம் தேதி புதன் பகவானும் விருச்சிக ராசியில் வக்ர நிலையை அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் எதிரெதிர் வக்ர நிலையால் சில ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்கள் ஏற்படும் அந்த ராசிகளை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் இந்த அமைப்பால் தன்னம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் அதற்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். அதனால் மனக்கவலைகள் ஏற்படும். நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் அதில் கவனத்தோடு செயல்பட வேண்டும். செலவு செய்யும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் சில பின்னாடி ஏற்படலாம். யாரடி நம் தேவை இல்லாமல் பேசுவது கூடாது அதிர்ஷ்டம் துணையில்லாததால் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் முடிவது சிரமம் ஏற்படும். பயணங்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கும் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் தேவை.
கடக ராசி
கடக ராசியை சேர்ந்தவர்கள் புதன் மற்றும் குருவின் வக்ர நிலையால் எந்த ஒரு முடிவுகளையும் பார்த்து எடுக்க வேண்டும். வெளி பார்க்கக் கூடிய இடத்தில் வேலையை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் கொடுப்பது வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்கினால் உங்களுடைய நிதிநிலைமை மிகவும் மோசமாக மாறிடும். உடல்நல ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மொத்தத்தில் உடல் நலம் மற்றும் வேளையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.
துலாம் ராசி
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வக்ர நிலையால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். திருமணம் தொடர்பாக சில பிரச்சினைகள் ஏற்படும் எனவே திருமண வாழ்க்கையில் அனுசரித்து போவது நல்லது. திருமணம் முயற்சியில் சில அலைச்சல் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே பெரிய சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நிதானமாக பிரச்சினைகளை கையாள வேண்டும். நீண்ட நாட்களாக ஏதாவது உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் கொஞ்சம் கவனம் தேவை.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற பண பிரச்சனை ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்காமல் கூட போகும். தொழில் செய்பவர்களின் வணிகம் நஷ்டத்தை சந்திக்கலாம் அதனால் எந்த ஒரு முடிவையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
இதனையும் படியுங்கள் : சூரியன்-சனி ஒருவரையொருவர்பார்ப்பதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் மழையாக கொட்ட போகிறது!