Advertisement
அசைவம்

கமகமக்கும் செட்டிநாடு அயிரை மீன் குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

Advertisement

உங்களுக்கு இந்த சுவையான அயிரை மீன் குழம்பு சாப்பிட ஆசையா? அப்படி எனில் தொடர்ந்து படியுங்கள் மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஸ்பெஷல் ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்த படி அயிரை மீன் குழம்பு தான்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி ?

Advertisement

இந்த மீன் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் செட்டி நாடு ஸ்டைலில் எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசியில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

அயிரை மீன் குழம்பு | Ayrai Meen Kulambu Recipe In Tamil

Advertisement
Print Recipe
உங்களுக்கு இந்த மீன் குழம்பு சாப்பிட ஆசையா? அப்படி எனில் தொடர்ந்து படியுங்கள் மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஸ்பெஷல் ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்த படி அயிரை மீன் குழம்பு தான். இந்த மீன் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் செட்டி நாடு ஸ்டைலில் எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசியில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Fish, மீன்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 people

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 250 கிராம் அயிரை மீன்
  • 250 கிராம் வெங்காயம்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 10 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி இலை கொஞ்சம்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ் ஸ்பூன் கடுகு
  • ½ டீஸ் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • புளி சிறிய எலுமிச்சை அளவு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் அரைத்தது

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும்.
  • அது துடிப்பு அடங்கியதும் நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து நன்றாக தாளித்து வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி, உப்பு தேவையான அளவு சேர்க்க வேண்டும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த் தூள், மசாலா தூள், சேர்க்கவேண்டும்.
  • பிறகு புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை போனவுடன் மீனை போடவும்.
  • பிறகு 5 நிமிடம் கழித்து தேங்காய் பால் சேர்க்க வேண்டும். கடைசில் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
  • இப்பொழுது அட்டகாசமான அயிரை மீன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 4g | Protein: 36g | Sodium: 7mg | Potassium: 8mg | Fiber: 1g | Vitamin A: 1.6IU | Iron: 40mg
Advertisement
swetha

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

2 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

4 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

5 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

8 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

8 மணி நேரங்கள் ago