Advertisement
சைவம்

சுவையான கேரளா அரிசி புட்டு செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். அந்த வகையில் இன்று நாம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் அரிசி புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : சுவையான கேரளா மட்டன் குருமா செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் இப்படி காலை உணவாக புட்டு செய்து அதனுடன் வாழைப்பழத்தை உணவாக சாப்பிட்டு பார்த்தால் அதன் சுவை சொல்வதற்கு வார்தையை இல்லை அந்த அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். இனி தினமும் காலையில் இதை செய்து தரச் சொல்லி உங்களை கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த கேரளா ஸ்டைல் அரிசியை புட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சுவையான அரசி புட்டு

Print Recipe
இதில் இன்று நாம் புட்டு எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக பல வகைகளில் புட்டு செய்யலாம் ரவை புட்டு, கேப்பை புட்டு, கோதுமை புட்டு, திணை புட்டு, மீன் புட்டு இதுபோன்று ஏராளமான புட்டு வகைகள் உள்ளனர். ஆனால் இன்று நாம் செய்யப்போவது பச்சரிசியை வைத்து அரிசி புட்டு செய்ய போகிறோம். இதற்கு கண்டிப்பாக புட்டு பாத்திரம் வேண்டும் அதை முக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள் புட்டு எவ்வாறு செய்வது என்பதை தொடர்ந்து பாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, இந்தியன்
Keyword RICE CAKE, அரிசி புட்டு
Prep Time 30 minutes
Cook Time 15 minutes
Total Time 45 minutes
Servings 2

Equipment

  • 1 புட்டு அவிக்கும் பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மீடியம் அளவு தட்டு
  • 2 பவுள்

Ingredients

  • 1/2 KG பச்சரிசி தேவையான அளவு
  • 1 முமு தேங்காய்
  • 1 கப் சீனி அல்லது கருப்பட்டி தேவையான அளவு
  • தூள் உப்பு தேவையான அளவு

Instructions

  • சுவையான அரசி புட்டு செய்முறை
  • முதலில் ஒரு மணி நேரங்கள் பச்சரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறிய பச்சரிசியை ஈரம் இல்லாத துணியில் அரிசியை பரப்பி விட்டு பேன் அல்லது நிழலில் உலர வையுங்கள்.
  • உலர வைத்த பச்சரிசி ஈரம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு ஈரம் காய்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • அப்படி அரைத்த மாவை சல்லடையில் நன்றாக சலித்துக் கொண்டு சலித்தேடுத்த மாவை ஒரு கடாய் ஒன்றில் போட்டு நன்றாக வறுக்கவும்.
  • மாவு
    Advertisement
    திருத்திரு என்று வரும் அளவுக்கு வறுத்து எடுக்கவும் அப்படி வறுத்தெடுத்த மாவை ஒரு பவுல்லிள் எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். (மாவு கட்டியாகவும் அல்லது கூழ் மாதிரியும் ஆகிவிடக்கூடாது ) திருத்திருவனா இருக்கவும்.
  • அதன் பிறகு நாம் எடுத்துக்கொண்ட தேங்காய்யை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு புட்டு அவிக்கும் பாத்திரத்தில் அடியில் அரை பாத்திரம் தண்ணீர் ஊற்றி நிரப்பி நன்றாக கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்த உடன் புட்டுக் குழாயில் அடியில் சில்லை போட்டு 1/4 குழாய்க்கு புட்டு மாவை அமுக்காமல் போடவும்.
  • பிறகு தேங்காய் உள்ளே போட்டு மீண்டும் புட்டு மாவை உள்ளே வைக்கவும். மேல் துருவிய தேங்காய் போடவும் அதற்கு மேல் மறுபடியும் புட்டு மாவு வைத்து துருவிய தேங்காய் மேலே போட்டுவும்.
  • புட்டு குழாயை மூடி இப்போது புட்டுக் குழாயை புட்டு பாத்திரத்தில் வைத்து மாட்டி விடவும்.
  • புட்டுக் குழாயின் மேல் உள்ள துவாரம் வழியாக ஆவி வரும் வரை காத்திருக்கவும் ஆவி வந்ததன் பின் ஒரு நிமிடங்கள் காத்திருந்து புட்டுக் குழாயை கழட்டி எடுக்கவும்.
  • நாம் எடுத்துக்கொண்ட மீடியமான தட்டை மேல் புட்டுக் குழாயை வைத்து ஏதாவது கரண்டி ஒன்றை புட்டுக் குழாய் பின் வழியில் இருந்து குத்தி மெதுவாக புட்டை குத்தி வெளிய எடுக்க வேண்டும்
  • எடுத்த புட்டினுடன் சீனி அல்லது கருப்பட்டியை சேர்த்து சாப்பிடவும்.

Nutrition

Serving: 2g | Carbohydrates: 49.8g

English Overview: Arisi puttu is one of the most important dishes in south india. arisi puttu recipe or arisi puttu seivathu eppadi or arisi puttu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

2 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

2 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

3 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

5 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

7 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

8 மணி நேரங்கள் ago