சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!

- Advertisement -

ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவும், வீடுகளில் தோரணம் கட்டவும் பயன்படுத்தினார்கள். இப்போதும்கூட பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த மலருக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?' என்று ஒரு மருத்துவ பழமொழிகூட உண்டு.

-விளம்பரம்-

உணவே மருந்து மருந்தே உணவு

இன்றைக்கு பலரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக விளங்கக்கூடியது ஆவாரை. தரிசு நிலங்களில் தானாக வளரக்கூடிய இந்த மூலிகை இன்னமும்கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. குறிப்பாக ரயில் வழி பயணங்களின்போது காலியாகக் கிடக்கும் தரிசு நிலங்களில் செழித்து வளர்ந்திருக்கும் இந்தப்பூவை சர்க்கரை நோயாளிகள்தான் உண்ண வேண்டும் என்றில்லை.உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஒருவேளை தேநீராகவும், இன்னொரு வேளை இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி அல்லது துவையலாகவும், பொரியலாகவும், சாம்பாராகவும் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் பிற்காலத்தில் வரும் நோய் பாதிப்புகளை முன்கூட்டி தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. துவர்ப்புத்தன்மை நிறைந்திருந்தாலும் ஆவாரம்பூ உண்பதற்கு ஏற்றது, எளிது.

- Advertisement -


சட்னி துவையல்


ஆவாரம்பூவை அதன் பச்சை வாசனை போகுமளவுக்கு நன்றாக வதக்க வேண்டும். இதைத்தொடர்ந்து சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்து, தேங்காய் போன்றவற்றை எண்ணெய்விட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு ஆவாரம்பூ உள்பட அனைத்தையும் அம்மி அல்லது மிக்சியில் அரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவைத்து சட்னி செய்யவேண்டும். இதேபோல் துவையலும் செய்துகொள்ளலாம். ஆவாரம்பூவை மட்டும் அரைத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை சுட்டு சாப்பிடலாம். பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு அல்லது சாம்பார் செய்தும் சாப்பிடலாம். மாலைவேளையில் தேநீராக தயார் செய்தும் சாப்பிடலாம். வெறும் ஆவாரம்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் தேநீர் செய்யலாம். இன்னும் சில பொருள்கள் சேர்த்தும் தேநீர் செய்யலாம்.


ஆவாரம்பூ தேநீர்


அரை கிலோ காய்ந்த ஆவாரம்பூவுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை தலா 10 கிராம் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் சுவையான ஆவாரம்பூ தேநீர் தயாராகிவிடும். வேண்டுமென்றால் பால் சேர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு பலரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இந்த ஆவாரம்பூ தேநீர் பயன்படும். ஆவாரம்பூவை மட்டுமல்லாமல் அதன் கொழுந்து இலைகளையும் வெயிலில் காயவைத்து பொடியாக்கி அதை கசாயமாக்கிக் குடிக்கலாம். காலை எழுந்தவுடன் காபி, மாலையில் டீ என பழகிப்போன நாம் ஆவாரம்பூவில் தேநீர் செய்து அருந்தலாம். சமீபகாலமாக க்ரீன் டீ குடிக்க மாறியிருப்பவர்கள் ஆவாரம்பூ டீ குடிப்பது சிறப்பாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாத எரிச்சல்


சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, தண்ணீர் தாகம், நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு என பல பிரச்சினைகள் அணிவகுக்கும். இதற்கு ஆவாரம்பூவின் முழு செடியையும் அதாவது அதன் இலை, பூ, பட்டை, வேர், விதை என அனைத்தையும் நிழலில் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்று டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் 2 ஏலக்காய், சிறிது லவங்கப்பட்டை சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் தயார் செய்து குடித்துவந்தால் மேலே சொன்ன பிரச்சினைகள் விலகும். சர்க்கரை நோய் பாதித்து உடல் மெலிந்தவர்களும்கூட இந்த ஆவாரைச் சுவைநீர் நல்லதொரு பானமாக அமையும்.

-விளம்பரம்-


குழிப்புண் குணமாக்கும்


ஆவாரம்பூ சர்க்கரை நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் குழிப்புண் உண்டாகி அது தீவிரமாகி காலையே அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படிப்பட்ட நேரங்களில் ஆவாரம்இலையை அரைத்து ஒரு கரண்டியில் வைத்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி கட்டி சுத்தமான பருத்தித்துணியால் மூடி கட்ட வேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டி வந்தால் சர்க்கரை நோயாள் ஏற்படும் குழிப்புண்கள் மாயமாகிவிடும். வெறும் இலைகளை மட்டும் அரைத்துக் கட்டினாலும் குழிப்புண் ஆறிவிடும். இதுமட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வெடிப்பு, வறட்சி, உடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். அதற்கு ஆவாரம்பட்டையுடன் கஸ்தூரி மஞ்சள், காய்ந்த மிளகாய், சிறிது சாம்பிராணி சேர்த்துக் காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தேய்த்துக் குளித்தால் பலன் கிடைக்கும்.


குழந்தைப்பேறு கிடைக்கும்


வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் ஆவாரம்பூவின் இதழ்களை காயவைத்து பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு பலன் பெறலாம். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை கட்டுப்படுத்த 20 கிராம் ஆவாரம்பட்டையை பொடியாக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்ற வைத்து 50 மில்லி அளவு காலை, மாலை வேளைகளில் குடிக்க வேண்டும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரம்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பமுண்டாவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here