இலை அடை அப்படின்னா ஒவ்வொருத்தவங்களுக்கு தெரியும் ஒரு சிலருக்கு தெரியாது. கொழுக்கட்டைக்குள்ள பூரணம் வச்சு செய்றது தான் இந்த இலை அடை. இந்த பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி எதுல வேணா செய்யலாம் அந்த வகையில குக் வித் கோமாளி நிகழ்ச்சியில பாபா பாஸ்கர் மாஸ்டர் செஞ்ச சூப்பரான பலாப்பழம் வைத்து செய்யக்கூடிய இலை அடை தான் பார்க்க போறோம். இந்த இலை அடை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வாழை இலை வைத்து செய்றதால வாழை இலையோட மணமும் சேர்ந்து இந்த இலை அடைக்கு ஒரு ருசியை கொடுக்கும்.
முக்கனிகல்ல ஒரு கனியான பலாப்பழம் வச்சு செய்யக்கூடிய இந்த இலை அடை கண்டிப்பா உங்க வீட்டில இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் கூட இந்த இலை அடை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பா உங்க வீட்ல குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டா இந்த இலை அடைய செய்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான சத்தான ஆரோக்கியமான இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இலை அடை | Ela Ada Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி மாவு
- 2 டேபிள் ஸ்பூன் கருப்பட்டி
- 7 துண்டு பலாப்பழம்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 2 டேபிள் ஸ்பூன் சிகப்பு அவல்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பலாப்பழத்தை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய் சேர்த்து பலாப்பழத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு கருப்பட்டியை சேர்த்து கிளறிய பிறகு சிவப்பு அவல் சேர்த்து கிளறவும்.
- அனைத்தும் சேர்ந்து நன்றாக நெய்யில் வதங்கிய பிறகு தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது பிசைந்த மாவை வாழை இலையில் தட்டி அதில் பலாபழ கலவையை சேர்த்து மூடி விடவும்.
- பிறகு வாழை இலையை உள்ளே வைத்துள்ள மாவின் அளவுக்கு வெட்டி இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான இலை அடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கமககமனு ருசியான வாழை இலை வஞ்சரம் மீன் இப்படி செஞ்சு சாப்பிட கொடுங்க! அருமையான சுவையில் இருக்கும்!