நமது உடல்நலத்தை பேணி காக்க வாழைப்பழம் உதவுகிறது. தினமும் காலையில் இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான எனர்ஜியை கொடுக்கும். இதில் பல வகை வாழைப் பழங்கள் உள்ளன. ரஸ்தாளி, பூவம், மொந்தம், கற்பூரவள்ளி, மட்டி பழம்,செவ்வாழை, ஏலக்கி என வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்யலாம் என கூறினால் நம்ப முடிகிறதா? வாழைப்பழ அல்வா, வாழைப்பழ மில்க் ஷேக், வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ மால்புவா, வாழைப்பழகேக், வாழைப்பழ தோசை, வாழைப்பழ போண்டா ஆகியவை செய்யலாம். சரி! இப்போது வாழைப்பழ புட்டிங் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். மாலையில் குழந்தைகள் சாப்பிட கேட்கும் போது அவங்களுக்கு ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நமக்கு தோணும் ஆனா அதுக்கு அதிகமான காசும் செலவாக கூடாது அப்படின்னு நினைப்போம். அந்த வகையில காசு அதிகமாக செலவாகாமல் குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி ஒரு டிஃபரண்டான வாழைப்பழ புட்டிங் செய்து கொடுங்கள்.
வாழைப்பழ புட்டிங் | Banana Pudding Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 வாழைப்பழம்
- 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
- 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 2 கப் பால்
- 1 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்
- 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 1/2 டீஸ்பூன் குங்குமப் பூ
- 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி
- 1/2 டீஸ்பூன் அதிமதுரம்
- 2 டேபிள் ஸ்பூன் தேன்
- 1 டேபிள் ஸ்பூன் பாதாம்
- 1 டேபிள் ஸ்பூன் முந்திரி
செய்முறை
- முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் நறுக்கிய வாழைப்பழம், பால் பவுடர், சோள மாவு, சர்க்கரை, பால், கண்டென்ஸ்டு மில்க், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இந்த கலவையை ஊற்றி தீயை குறைத்து வைத்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து விடவும்.
- பின் குங்குமப் பூ, ஜாதிக்காய் பொடி, அதிமதுரம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நறுக்கிய வாழைப்பழ துண்டுகள் வைத்து அதன்மேல் இந்த கலவையை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து விடவும்.
- பின் இதனை வெளியே எடுத்து விட்டு அதன்மேல் தேன் மற்றும் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ புட்டிங் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வெறும் மூன்று பொருள் வச்சு இந்த வெயிலுக்கு ஏத்த சுவையான இளநீர் புட்டிங் செய்யலாம்!