தீராத பல நோய்களுக்கு மருந்தாக சித்த மருத்துவம் கூறிய அற்புத மூலிகை!

- Advertisement -

தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன் போருக்கு போகும்போது தும்பை மாலையை அணிஞ்சிட்டு போனதா ராமாயணத்துல குறிப்பு இருக்கு. அதேமாதிரி ராவணனுக்கு எதிரா ராமன் துளசி மாலையையும் கூடவே தும்பைப்பூ மாலையையும் அணிஞ்சிட்டு போனதா கம்பர் சொல்லியிருக்கார்.

-விளம்பரம்-

தும்பைப்பூ இட்லி

அந்த அளவுக்கு பிரபலமான தும்பைப்பூவை இட்லி சுடுற சிலபேர் தும்பைப்பூ மாதிரி மென்மையா இட்லி இருக்கணுன்னு சொல்வாங்க. சிறுகதை ஒண்ணுல தும்பைப்பூவின் நிறத்தில் சோறு பரிமாறப்பட்டதுன்னு சொல்லிருப்பாங்க. தும்பைச் செடியில போய் தொங்கிட்டு சாவுன்னு சிலபேர் கேலி பேசுறதையும் கேட்டிருப்பீங்க. அப்படிப்பட்ட தும்பை குப்பையில கேட்பாரில்லாம தானா வளர்ந்து கிடக்கு. அந்த மூலிகைக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. அதனால இனிமே மழைக்காலத்துல செழிச்சி வளரக்கூடிய தும்பை இலையையும் பூவையும் எடுத்து பயன்படுத்துவோம்.

- Advertisement -

சளித்தொல்லை போக்கும்

மழை காலத்துலயும் குளிர் காலத்துலயும் சீதோஷ்ண நிலை எப்பவும் குளிர்ச்சியா இருக்கும். முக்கியமா ராத்திரி அடிக்கிற பனியால பலபேருக்கு தலைவலி, தலைபாரம் பிரச்சினை வரும். இந்தமாதிரி நேரங்கள்ல தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைச்சி மெல்லிசான துணியில தடவி நெத்தியில பற்று போட்டா நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம், இருமல்னு அவதிப்படுறவங்க தும்பைப்பூவை தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சா பலன் கிடைக்கும். பாலோட சேர்த்து கொதிக்க வச்சும் குடிக்கலாம். இதனால சளி தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும்.

சொறி சிரங்கு

சைனஸ் பிரச்சினை வந்து மூக்குல சிலபேருக்கு ரத்தம் வடியும். அப்போ தும்பைப்பூவையும், தும்பை இலையையும் சம அளவு எடுத்து கசக்கி சாறு பிழிஞ்சி காலைலயும், சாயங்காலமும் ரெண்டு சொட்டு மூக்கு உள்ள விட்டா பலன் கிடைக்கும். இல்லன்னா அந்தச் சாறை ஒரு பருத்தித்துணியில நனைச்சி மூக்குல வச்சி சுவாசிக்கலாம். அதேமாதிரி தும்பைப்பூவை நல்லெண்ணெய்ல போட்டுக் காய்ச்சி குளிச்சா தலைபாரம், சளி தொடர்பான நோய்கள்ல இருந்து விடுபடலாம். தும்பை இலைச்சாறோட கொஞ்சம் கல் உப்பு சேர்த்து சொறி, சிரங்கு உள்ள இடங்கள்ல பூசி குளிச்சிட்டு வந்தா பிரச்சினை சரியாகும். இந்தமாதிரி குளிக்கும்போது சீயக்காய் தேய்ச்சி குளிக்கிறது நல்லது. இதை தொடர்ந்து 5 நாள் செஞ்சிட்டு வந்தா முழுமையான பலன் கிடைக்கும்.

மஞ்சள்காமாலைக்கு மருந்து

விஷப்பூச்சிகள் கடிச்சா தும்பை இலை, தும்பை பூ ரெண்டையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து கால் டம்ளர் குடிக்கணும். அதேபோல தும்பை இலையையும் தும்பைப்பூவையும் அரைச்சி பூச்சி கடிச்ச இடத்துல பற்று போடணும். இந்த மாதிரி செஞ்சா எந்தப்பூச்சி கடிச்சாலும் விஷம் முறிஞ்சிரும். பாம்பு கடிச்சாலும்கூட இதேமாதிரி செஞ்சா ஒரு முதலுதவியா இருக்கும். அதுக்கு அப்புறமா அடுத்தகட்ட சிகிச்சை எடுத்துக்கிடலாம். மஞ்சள்காமாலை நோய்க்குக்கூட தும்பை இலை மருந்தாகுது. அதாவது தும்பை இலையோட கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை சம அளவு எடுத்து அரைச்சி பாக்கு அளவு எடுத்து பால்ல கலந்து தினமும் ரெண்டு தடவை குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

ஒற்றைத்தலைவலி போக்கும்

குழந்தைகளுக்கு தொண்டைல கோழை கட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுத்தும். இதுக்கு 25 தும்பைப்பூவை அரை டம்ளர் பசும்பால்ல ஒரு மணி நேரம் ஊற வச்சி குடிக்க கொடுத்தா போதும், பிரச்சினை சரியாயிரும். இப்பிடி தும்பையோட மருத்துவ குணத்தை சொல்லிக்கிட்டே போகலாம். தும்பைப்பூவை பசும்பால் சேர்த்து அரைச்சி குடிச்சா விக்கல் நின்னுரும். ஒத்த தலைவலிக்கு தும்பையோட முழுச்செடியையும் தண்ணி விட்டு கொதிக்க வச்சி ஆவி பிடிச்சா சரியாயிரும். தும்பை இலையை தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சா வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி சரியாயிரும். இன்னும் பல பிரச்சினைகளை சரிபண்ணக்கூடியது தும்பை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here