சித்த மருத்துவம் நமக்கு தந்த அற்புதமான மூலிகைகளில் இதுவும் ஒன்று!

- Advertisement -

மணத்தக்காளி… இதை மணித்தக்காளி, மிளகுத் தக்காளிக்கீரைன்னும்கூட சொல்வாங்க, இந்தக் கீரையில புரதச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளரக்கூடிய இந்தக்கீரை அடிப்படையில குளிர்ச்சித் தன்மை உள்ளது. இதனால நிறைய நோய்கள் சரியாகும். பொதுவா உடல் சூடு அதிகமா இருந்தாலே பல நோய்கள் வரிசை கட்டி வரும். அதனால உடல் சூட்டை குறைக்கிறதுல இந்தக்கீரை முக்கியமானது. வாய்ப்புண் வயிற்றுப்புண்ணை சரிபண்றதுக்கு என்னென்னவோ மருந்துகளைச் சாப்பிடுறவங்க முதல்ல மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு பார்க்கலாம்.

-விளம்பரம்-

வயிற்றுப்புண் சரியாகும்

மணத்தக்காளிக்கீரையை வெறுமனே வாய்ல போட்டு மென்னு சாறை விழுங்கலாம். இல்லன்னா கீரையை சமைச்சி சாப்பிடலாம். சூப் போட்டுகூட குடிக்கலாம். மணத்தக்காளியோட கொஞ்சம் சீரகம். மிளகாய் வற்றல் சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி தண்ணி சேர்த்து வேக வச்சி கடைசியா தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டா வாய்ப்புண்ணும் வயித்துப்புண்ணும் சரியாயிரும். இந்தமாதிரி உங்களுக்கு எந்தமாதிரி வழி பிடிக்குதோ அப்படி மணத்தக்காளிக்கீரையை தயார் பண்ணி சாப்பிட்டு வந்தா பலன்பெறலாம். இதை ஒருநாள் சாப்பிட்டா பலன் கிடைக்காது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நிச்சயம் பலன் கிடைக்கும். இதுமட்டுமில்ல இருமல், இளைப்பு நோய்கள்கூட சரியாகும். வயிற்றுப்போக்கு பிரச்சினையும் சரியாகும்.

- Advertisement -

சிறுநீர், வியர்வை வெளியேற்றும்

சிலபேர் ஒழுங்கா சிறுநீர் போகாம சிரமப்படுவாங்க. அதேமாதிரி வியர்வை வெளியேறாமலும் கஷ்டப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்தக்கீரையை சாப்பிட்டு வந்தா அதை இயல்பா வெளியேத்துறதுக்கு உதவும். முக்கியமா உடம்புல உள்ள கெட்ட நீரை வெளியேத்துறதுக்கு மணத்தக்காளிக்கீரை ரொம்ப நல்லது. சிறுநீர் போகாம சிரமப்படுற பலபேர் வேற வேற சிகிச்சை எடுத்துப்பார்த்து அது பலனளிக்காம இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு மணத்தக்காளிக்கீரை ரொம்ப நல்லது. கைப்பிடி அளவு கீரையோட பார்லி அரிசி ஒரு ஸ்பூன், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து கசாயம் பண்ணி குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

ஜலதோஷம் விரட்டும்

ஜலதோஷம் வந்தா உடனே மணத்தக்காளிக் கீரையை சூப் செஞ்சி குடிச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷத்தை அப்பிடியே விட்டா மூக்கடைப்பு, சளித்தொல்லைன்னு நீண்டுக்கிட்டே போகும். அந்த நேரத்துல மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டா பலன் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனா யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பலன் கிடைக்கும். இதேமாதிரி இன்னைக்கி சூழல்ல குழந்தையில்லாதவங்களோட எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. அதுக்கும்கூட மணத்தக்காளி நல்லது. தினமும் காலைல பெண்கள் இந்த மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தா நிச்சயம் பலன் கிடைக்கும்.

கர்ப்ப பைக்கு நல்லது

கருப்பையில உள்ள கெட்ட அழுக்குகள் வெளியேறுறதோட கர்ப்பப்பை புண் சரியாகும். நாளடைவில மாதவிடாய் கோளாறுகள் எல்லாம் சரியாகி கரு உண்டானா அதை தாங்குற சக்தி கிடைக்கும். வேற என்னென்னவோ சிகிச்சை எடுக்கிறவங்க மணத்தக்காளிக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். கல்யாணம் ஆனதும் கணவன், மனைவி ரெண்டுபேரும் மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். குறிப்பா பெண்கள் சாப்பிடுறதால சுகப்பிரசவம் நடக்கிறதுக்கும் நல்ல தீர்வா இருக்கும்.

-விளம்பரம்-

கீரை காய் பழம்

கல்லீரல் பிரச்சினை, மஞ்சள்காமாலைன்னு பல பிரச்சினைகளுக்கு மணத்தக்காளி நல்லது. நெஞ்சுவலி உள்ளவங்க மணத்தக்காளிக்கீரையை காய வச்சி பொடியாக்கி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். மணத்தக்காளின்னு சொன்னதும் நாம அந்தக்கீரையை மட்டுந்தான் பயன்படுத்துவோம். அதோட காயை தனியா சமைச்சி சாப்பிடலாம். அதேமாதிரி மணத்தக்காளி பழத்தை செடியில இருந்து பறிச்சி கழுவி அப்பிடியே சாப்பிடலாம். காயை மோர்ல ஊற வச்சி காய வச்சி வற்றலாக்கி வறுத்துச் சாப்பிடலாம். குழம்பு வச்சும் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here