கிட்னி கல்லை கரைக்கும் அற்புதமான மருத்துவ குணம் கொண்ட மூலிகை விதை!

- Advertisement -

கருஞ்சீரகம்… இந்தப்பொருள் சமையலறையில இருக்காதுன்னாலும் மருந்துக்காக பலபேர் பயன்படுத்துறாங்க. நமக்கெல்லாம் சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும். ஆனா கருஞ்சீரகத்தைப் பத்தி அதிகமா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியதுன்னு நபிகள் நாயகம் சொன்னதாக சொல்றாங்க. அந்த அடிப்படையில யுனானி மருத்துவத்துல கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துறாங்க. பைபிள்லகூட கருஞ்சீரகத்தைப் பத்தி சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு சிறப்பானது கருஞ்சீரகம்.

நோய் எதிர்ப்பு சக்தி

கருஞ்சீரகத்துல அதோட விதைகளுக்குத்தான் மருத்துவ குணம் இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதுல உடம்புக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு இருக்கிறதால கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். அது மட்டுமில்லாம அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்தும் இதுல இருக்கு.

- Advertisement -

வீக்கம் குறைக்கும்

ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ள இந்த கருஞ்சீரகம் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதுமட்டுமில்ல ஆஸ்துமா, சுவாசக்கோளாறு, அலர்ஜி நோய்களையும் குணப்படுத்தும். இதய நோய், ஆஸ்துமா, புற்று நோய்னு பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. எலும்பு மஜ்ஜை உற்பத்தி ஒழுங்கா நடக்குறதுக்கு கருஞ்சீரகம் உதவியா இருக்கும். அதேமாதிரி புற்றுநோய் கட்டிகள் உண்டாகாம பாதுகாக்கக் கூடிய இந்த கருஞ்சீரகம், கணையத்துல புற்றுநோய் வந்தா அதை கட்டுப்படுத்த உதவும்.

-விளம்பரம்-

சளி வெளியேற்றும்

எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கக்கூடிய பிரச்சினைகள்ல ஒண்ணு மூக்கடைப்பு. அதுக்கு கருஞ்சீரகம் நல்ல மருந்து. எப்படின்னா ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை 50 மில்லி தேங்காய் எண்ணெய்ல போட்டு சூடாக்கி அதுல ரெண்டு சொட்டு எடுத்து மூக்குல விட்டா மூக்கடைப்பு சரியாயிரும். அது மாதிரி ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை வெந்நீர், தேன் சேர்த்து குடிச்சா சிறுநீரகக் கற்கள் மட்டுமில்லாம பித்தப்பை கற்களும்கூட கரைஞ்சிரும். உடனே நம்ம மக்கள் ஒரு தடவை குடிச்சாலே சரியாயிருமான்னு கேப்பாங்க. காலைல, சாயங்காலம்னு கொஞ்ச நாள் சாப்பிட்டா நிச்சயம் பலன் கிடைக்கும். தொடர் இருமல் இருந்தா ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை அரை டீஸ்பூன் அரைச்ச பூண்டு விழுதோட தேன் சேர்த்துச் சாப்பிட்டா சரியாயிரும். இந்த மாதிரி சாப்பிட்டு வந்தா நுரையீரல்ல தேங்கியிருக்கிற சளி வெளியேறும்.

தோல் நோய்க்கு மருந்து

தோல் நோய்களுக்குக்கூட கருஞ்சீரகம் நல்ல மருந்துதான். கரப்பான், சொரியாசிஸ்னு தோல் நோய் உள்ளவங்க கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்ச்சிக் குளிக்கலாம். அதனால தோல் நோய் குணமாகுறதோட தோல் நோய் வந்தவங்களுக்கு வரக்கூடிய புண்களும், தழும்புகளும் மறைஞ்சிரும். குளியல் பொடிகளோட கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி குளியல் பொடியோட சேர்த்து தேய்த்துக் குளிக்கலாம். மாதவிடாய் கோளாறுகளுக்குக்கூட கருஞ்சீரகம் ரொம்ப நல்ல மருந்து.

மாதவிடாய் சீராக்கும்

மாதவிடாய் நேரத்துல அடி வயிறு கனமாகி சிறுநீர் போறதுக்கு சிரமப்படுற சில பெண்களை பார்க்க முடியுது. அந்த நேரத்துல கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டா சரியாகும். ஆனா மாதவிடாய் வர்றதுக்கு பத்து நாள் முன்னாடி இருந்தே இந்த மருந்தை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரணும். இது மாதவிடாய் நேரத்துல வரக்கூடிய வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு பிரச்சினைகளை சரிபண்ணும்.

கருப்பை அழுக்கு நீக்கும்

பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு கருப்பையில சேரக்கூடிய அழுக்கை நீக்குறதுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை பனைவெல்லத்தோட சேர்த்துச் சாப்பிடலாம். இதை தொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு வந்தா சரியாயிரும். இதை மத்தவங்களும் சாப்பிட்டு வந்தா உடம்புல உள்ள கெட்ட கழிவுகள், மலம், சிறுநீர், வியர்வை எல்லாம் வெளியேறிரும். ஆண்மை குறை பிரச்சினையைக்கூட சரிபண்ணிரும். இதுக்கு கருஞ்சீரகம் எண்ணெயை வெற்றிலைமேல பூசி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here