சுவையான மிளகு சட்னி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்….

- Advertisement -

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த மிளகு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த மிளகு சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Print
No ratings yet

சுவையான மிளகு சட்னி செய்வது எப்படி ?

Prep Time10 mins
Active Time10 mins
Total Time20 mins
Course: Breakfast, chutney, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Milaku chutey, மிளகு சட்னி
Yield: 4 person
Calories: 5.77kcal

Equipment

 • 1 கடாய்
 • 1 மிக்ஸி
 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

 • 1 தேக்கரண்டி மிளகு
 • ¾ தேக்கரண்டி வெந்தயம்
 • 4 வத்தல்
 • 5 தக்காளி
 • எண்ணெய் தேவையான அளவு
 • பெருங்காயம் சிறிது
 • 1 தேக்கரண்டி கடுகு, உளுந்த பருப்பு
 • உப்பு தேவையான அளவு
 •  கருவேப்பிலை சிறிது

செய்முறை

 • முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெயில் ஊற்றி எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கும் எண்ணெய் சூடு ஏறியவுடன் வற்றலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 • பின்பு அதில் மிளகை போட்டு வறுத்து எடுக்கவும் பின் வெந்தயத்தையும் போட்டு வறுத்து எடுக்கவும் பின்பு நறுக்கி வைத்திருக்க தக்காளியை போட்டு வதக்கவும்.
 • பின் தக்காளியின் பச்சை வாடை போகி மென்மையாக வரும் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பெருங்காயம் தேவையான அளவுக்கு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காடயை கீழே இறக்கி வைக்கவும் பின்னர் சூடு ஆறியவுடன் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • பின்பு அரைத்த பின் அதை தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி விடுங்கள்.
 • பின்பு காடையை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து அந்த தாளிப்பை சட்னியில் கொட்டி கலந்து விடவும் அவ்வளவுதான் சுவையான மிளகு சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Fiber: 0.582g | Calories: 5.77kcal | Protein: 0.239g | Carbohydrates: 1.47g
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here