எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ? வாருங்கள் பார்க்கலாம்…

- Advertisement -

ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த அளவுக்கு உருட்டு கம்பிகள் முக்கியமோ ஆது போன்று நம் மனித உடல் அமர்வதற்கு, ஓடுவதற்கு, நிற்பதற்கு, நடப்பதற்கு என இது போன்ற செயல்களை செய்வதற்கு நம் உடம்பில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். நம்ம உடம்பில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் அந்த எலும்புகள் சரியாவதற்கும் வேகமாக இணைவதற்கும் எலும்புகளுக்கு கால்சியம் சத்து அவசியமாக தேவைப்படும். இந்த கால்சியம் சத்தை எடுக்க விட்டமின் டி தேவை இந்த இரண்டும் போதுமான அளவு நம் உடலுக்கு கிடைத்துவிட்டால் எவ்வித பிரச்சனையும் இன்றி நம் உடல் இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மற்றும் எலும்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த உடல் நலத் தொகுப்பை மேலும் பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

எலும்பு முறிவு நேரத்தில் இதை செய்யுங்கள் :-

- Advertisement -

நம் உடலுக்கு தேவையான கால்சியத்தை அதிக அளவு சேர்ப்பதற்கு முக்கிய பங்கு வைப்பது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். தான் தினசரி நம் உடலுக்கு 1000 முதல் 1300 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவைப்படும். கால் பகுதியில் எலும்பு முறிவு காலின் உயரத்தை கூட்டும் ஆபரேஷன் போன்ற நம் செய்யும் பொழுது. குறைந்தபட்சம் ஒரு மூன்று மாதங்களாவது வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நாம் இப்படி மூன்று மாதங்கள் வீட்டிலே ஓய்வு எடுக்கும் பட்சத்தில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கு. இது போன்ற நேரங்களில் உடல் பருமன் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு கொழுப்புகள் நீக்கப்பட்ட மற்றும் கொழுப்புகள் கம்மியாக உள்ள ஸ்கிம்டு மில்க், டோன்ட் மில்க் போன்ற பால் வகைகளை சாப்பிடலாம். லாக்டோஸ் இன்டலாரன்ஸ் என்னும் பால் ஒவாமை உடையவர்கள் தினசரி பழச்சாறு, கீரை,சோயா பீன்ஸ் இந்த உணவுகளை சாப்பிட்டால் 1000 மில்லி கிராம் கால்சியம் நம் உடலுக்கு சாதாரணமாகவே கிடைக்கும்.

மீன் சாப்பிடுவதும் நல்லது :-

ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்தி குறைவு பிரச்சனை உடைய பெண்கள் அனைவரும் மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை படி பால் எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. 100 மில்லி கிராம் சோயா பீன்சில் 25 மில்லி கிராம் கால்சியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மிகவும் காலையில் சோயா பால் குடிப்பது நல்லது இதில் கொழுப்புகள் மிக குறைவு என்பதால் உடல் பருமன் ஆனவர்களும் சாப்பிடலாம். 100 மில்லிகிராம் மீனில் 15 மில்லி கிராம் கால்சியம் உள்ளது ஒமேகா கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சரம் மற்றும் கட்லா போன்ற மீன்களை சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்குமாம்.

-விளம்பரம்-

கொள்ளுவில் அதிக சத்துக்கள் உள்ளன :-

மேலும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஞ்சையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து போன்ற தாது உப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளனர். இதை சாப்பிடுவதால் எலும்புக்கு இன்னும் வலு அதிகரிக்கும். 100 மில்லி கிராம் நண்டில் 16 மில்லி கிராம் கால்சியம் உள்ளது எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மூன்று நாளுக்கு ஒரு முறை நண்டு சூப் குடித்து வந்தால் நல்லது நண்டில் அதிக சூடு இருப்பதால். நண்டு சாப்பிடுவதை மற்றும் சூப் குடிப்பதை வெயில் காலங்களில் தவிர்ப்பது நல்லது. கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது எலும்பு உறுதியாக இருப்பதற்கு கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவ சாப்பாடு மட்டும் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சாப்பிடுவது மூலமாகவோ அல்லது ரசம் குடிப்பதன் மூலமாகவோ எழும்பு மேலும் வலுவாகும்.

பழங்கள் தினசரி அதிகளவில் சாப்பிங்கள் :-

-விளம்பரம்-

முட்டைக்கோஸ், காலிபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். விட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவதன் மூலமாகவும் எலும்புகள் பலம் பெறும். ஆரஞ்சு கொய்யா ஸ்ட்ராபெரி வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களும் எலும்புகளை பாதுகாப்பாக வைப்பதற்கு பெரிதளவில் உதவுகிறது. 100 மில்லி கிராம் அத்திப்பழத்தில் 26 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதுதவிர கேரட், வெண்டைக்காய், வெங்காயம், மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற உணவுகளை நம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது இவற்றிலும் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது.

இரவில் கீரை சாப்பிடுவதை தவிருங்கள் :-

கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலும் வெந்தயக்கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கி கீரை மற்றும் பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது, மேலும் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் கீரைகளை அசைவ உணவோடு சேர்த்து சாப்பிடக்கூடாது மற்றும் இரவு நேரங்களிலும் கீரை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடுவதால் செரிமானம் ஆவதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்ளும். 100 மில்லி கிராம் கேழ்வரகில் 35 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ராகி கஞ்சி மற்றும் என்னை அதிகமாக பயன்படுத்தாமல் ராகி தோசை செய்தோம் சாப்பிடலாம். முந்திரியில் 37 மில்லி கிராம் கால்சியம், பாதாமில் 26 மில்லி கிராம் கால்சியமும், பிஸ்தாவில் 10 மில்லி கிராம் கால்சியமும் உள்ளது நம் உடலுக்கு தேவையான மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் இவற்றில் அதிகமாக உள்ளது. உடைந்த எலும்புகள் விரைவில் குணமாகும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும் பெரிய அளவில் இவைகள் உதவுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here