- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பப்ஸ் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் பப்ஸ் செய்து கொடுங்கள். பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ், முட்டை பப்ஸ், ஃபிஷ் பப்ஸ், மற்றும் வெஜிடபிள் பப்ஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் இன்று இங்கு நாம் காண இருப்பது பிரெட் முட்டை பப்ஸ். இவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி.
பெரும்பாலும் பப்ஸ் பிரியர்கள் பப்ஸ்சை பேக்கரியில் வாங்கி தான் சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே பேக்கரிகளில் கிடைப்பதை விட ஆரோக்கியமாக செய்து நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதுவும் மழை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த பிரெட் எக் பப்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது. இப்போது சுவையான பிரெட் எக் பப்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் முட்டையை வேகவைத்து எடுத்து இரண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் பிரெட்டை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஓரங்களை நறுக்கி விட்டு சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
பின் தேய்த்த பிரெட்டில் வதக்கிய வெங்காயம், முட்டையை வைத்து நான்கு பக்கமும் மடக்கி சோள மாவு கலவையால் ஒட்டி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ளதை எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பிரெட் எக் பப்ஸ் தயார்.






