ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிரட் டோஸ்ட் விரும்பி உண்பர்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள்: ருசியான பிரட் சீஸ் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த இனிப்பு பிரட் டோஸ்ட் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

ஸ்வீட் பிரெட் டோஸ்ட் | Sweet Bread Roast Receipe In Tamil

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிரட் டோஸ்ட் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: sweet bread roast, இனிப்பு பிரட் டோஸ்ட்
Yield: 4 people
Calories: 456kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

தேவையான பொருட்கள்

  • 7 பிரட்
  • 2 tbsp சீனி
  • 2 முட்டை
  • ¼ cup பால்
  • 2 tbsp நெய்
  • உப்பு சிறிதளவு

செய்முறை

  • இனிப்பு பிரட் டோஸ்ட் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சீனியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு முட்டையை நன்றாக வேறு ஒரு பாத்திரத்தில் கலந்து கொண்டு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் பால் மற்றும் சீனி கலவையுடன் சேர்க்க வேண்டும்.மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
  • பின் ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக எடுத்து கலவையில் இரண்டு புறமும் நன்றாக திருப்பி எடுத்து தோசை கல்லில் போட வேண்டும். சிறிது நெய்யை சேர்க்க வேண்டும்.
  • அவ்வப்போது இருபுறமும் திருப்பிப் போட்டுக் கொள்ள வேண்டும். வெந்ததும் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் .

Nutrition

Serving: 300gm | Calories: 456kcal | Carbohydrates: 21g | Cholesterol: 12mg | Sodium: 324mg | Potassium: 442mg | Sugar: 9.5g | Calcium: 12mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here