- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் பள்ளி முடிந்து உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பார்கள். அப்படி பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷமடைவார்கள் அல்லவா? சரி, என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரெட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரெட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடையை செய்து கொடுங்கள். இந்த பிரெட் வடை வித்தியாசமான சுவையுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இந்த பிரெட் ரவை வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் வழக்கமாக செய்யும் வடையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை இந்த பிரெட் ரவை வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான பிரெட் ரவை வடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் பிரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி, துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனுடன் தயிர், உப்பு, ரவை, அரிசி மாவு, கொத்தமல்லி, சோடா உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையில் சிறிதளவு எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பிரெட் ரவை வடை தயார்.






