- Prep
- 10 min
- Cook
- 30 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு கேக் செய்து கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே கேரட் கேக் செய்து அசத்துங்கள்.
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள காயை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இப்போது சுவையான கேரட் கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நேந்திரம் பழம் கேக் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் தயிர், சர்க்கரை, பால், உருக்கிய வெண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, பட்டை தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன்பிறகு துருவிய கேரட் மற்றும் திராட்சை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் சுற்றி வெண்ணெய் தடவி, நாம் செய்து வைத்துள்ள கலவையை சேர்த்து அதன்மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு தட்டை வைத்து இந்த பாத்திரத்தை வைத்து மூடி வைத்து 30 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் கேக் தயார்.






