- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
பொதுவா ஸ்கூல் விட்டு வர்ற குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டுட்டே இருப்பாங்க அவங்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுப்பது என்று ஒரே குழப்பமா இருக்கும். அந்த வகையில உங்களுக்கு எப்பவுமே எண்ணெய் பலகாரங்கள் செஞ்சு கொடுக்காம ஆரோக்கியமா என்ன செஞ்சு கொடுக்கிறதுன்னு அதைவிட குழப்பமா இருக்கும். அந்த வகையில நேந்திரம் பழம் இருந்துச்சுன்னா ஒரு தடவை நேந்திரம் பழம் வச்சு இந்த கேக் செஞ்சு குடுங்க.
இந்த நேந்திரம் பழம் கேக் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் பர்ஸ்ட் ஒரு கடாயில் பட்டர் சேர்த்து நம்ம நேந்திரம் பழத்தை ரோஸ்ட் பண்ணிட்டு அதுக்கு மேல நம்ம கேக் மிக்சர் ஊத்த போறோம். வெந்த உடனே அப்படியே எடுத்து உங்களுக்கு புடிச்ச மாதிரியான வடிவத்தில் வெட்டிக்கலாம். இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா கண்டிப்பா இந்த நேந்திரம் பழம் கேக் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இதுல மைதா மாவுக்கு பதிலா கோதுமை மாவும் சேர்த்துக்கிடலாம். ஆரோக்கியமானதா இருக்கும். இதுல முட்டை பால் எல்லாம் நம்ம சேர்க்க போறோம் அதனால டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான ஒரு ஆரோக்கியமான இந்த ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட செஞ்சி கொடுத்து அசத்துங்க. சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்குன்னு உங்கள பாராட்டுவாங்க.
ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்க கூட செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. இத காலைல பிரேக் பாஸ்ட்டா கூட குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிடலாம் இல்ல ஸ்னாக்ஸாவும் கொடுத்துவிடலாம். கண்டிப்பா மிச்சம் வைக்காம குழந்தைகள் சாப்டுட்டு வருவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான நேந்திரம் பழம் கேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்பொழுதும் போல் ஸ்வீட்ஸ் கடையில் வாங்குவதற்கு வீட்டிலே சுவையான ஆப்பிள் பான் கேக் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயில் பட்டர் சேர்த்து நேந்திரம் பழத்தை வட்ட வடிவில் நறுக்கி சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பால் முட்டை மைதா மாவு பேக்கிங் சோடா சர்க்கரை வெண்ணிலா எசன்ஸ் எடுத்து அரைத்து எடுக்கவும்.
அந்தக் கலவையை ரோஸ்ட் செய்துள்ள நேந்திரம் பழத்தின் மேல் ஊற்றவும்.
பத்து நிமிடம் மூடி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான நேந்திரம் பழம் கேக் தயார் அதனை உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.






