- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். எந்த ஒரு விஷேச வீட்டிலும் உணவிற்கு பின் வழங்கப்படும் ஒரு இனிப்பு வகை பாயாசம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலும் பல வகை உண்டு. அந்த வரிசையில் நாம் இங்கு செட்டிநாட்டு பழ பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம். இந்த செட்டிநாட்டு பழ பாயாசம் திருவிழாக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் செய்வது வழக்கம்.
மற்ற பாயாசங்களை விட, இதில் முந்திரி, பாதாம் நறுமணம் மேலோங்கி நிற்பதால், இதன் சுவை தனித்துவமானது. குறிப்பாக, பாதாம், முந்திரி மட்டுமே பிரதானப் பொருளாகக் கொண்டு, அரிசியுடன் சேர்த்து, இனிப்பில் சமைக்கப்படும் இந்த பாயாசம், மிக விரைவாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான இனிப்பு ஆகும். வீட்டில் பழங்கள் மட்டும் இருந்தால் போதும், ருசியான இந்த செட்டிநாடு பழ பாயாசத்தை அரை மணி நேரத்தில் செய்து அசத்தலாம்.
எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த செட்டிநாடு பழ பாயாசத்தை நாம் செய்து குடிக்கலாம். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த பழ பாயாசம் செய்து கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான இந்த செட்டிநாடு பழ பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு கும்மாயம்
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுளில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும். இது நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதில் நறுக்கிய ஆப்பிள், திராட்சை, மாதுளம், பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு பழ பாயாசம் தயார்.






