- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறக்கின்றன. தேன்குழல், சீப்பு சீடை, அதிரசம், மணகோலம், தட்டை, காரமுறுக்கு, அச்சு முறுக்கு, கை முறுக்கு, மாவு உருண்டை என வகைகள் உள்ளன. இதனை சிறுவா் முதல் பெரியவா் வரை உண்ணலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தென்னிந்திய ஸ்நாக்ஸ் வகைகள் உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக பசி நேரத்தில் நமக்கு மிக பெரிய வரப் பிரசாதமாக அவை கொஐ கொடுக்கும். ஆப்பம், வடை, பஜ்ஜி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை ஒரு நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிடலாம். அதுபோல நாவை சுண்டி இழுக்கக் கூடிய, சுவை மிகுந்த ஸ்நாக்ஸ்களில் ஒன்று முறுக்கு ஆகும். முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமான ஸ்நாக்ஸ் முறுக்கு ஆகும். பலருக்கு பிடித்த ஒரு நொருக்கு தீனி என்றால் அது முறுக்கு தான். அதனை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட நாம் வீட்டிலேயே தயாரித்து ருசிக்கலாம். முறுக்கு செய்வது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொண்டு நீங்களும் செய்து அசத்துங்கள். முறுக்கு என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் ஆகும். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் முறுக்கு பிடிக்காத எவரும் கிடையாது. பல் இல்லை என்றாலும் கூட, முறுக்கு சாப்பிடும் எத்தனையோ மக்களையோ நாம் நம் அனுபவத்தில் பார்த்திருப்போம். அதனை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட நாம் வீட்டிலேயே தயாரித்து ருசிக்கலாம். செட்டிநாடு கை முறுக்கு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான பூண்டு முறுக்கு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! இதை ரெம்ப சுலபமாக செய்து விடலாம்!
Ingredients
Method
முதலில் இட்லி அரிசி, தினை இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின் கட்டி மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் உளுந்தை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அரிசி மாவுடன், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி, வெண்ணெய், எள், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து முறுக்கு உழக்கில் வைத்து விரலை வைத்து அழுத்தி முறுக்கை சுத்தி விடவும். இப்படி அனைத்து மாவையும் முறுக்கு செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முருக்காக கரண்டியால் எடுத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் செட்டிநாட்டு பாரம்பரிய சுவையான மொறு மொறு முறுக்கு தயார்.






