- Advertisement -
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, சாம்பார் என்று வைக்காமல், இது போன்று காரசாரமாக மகாராஷ்டிரா மிளகாய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும், ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மிளகாய் சட்னி | Chilli Chutney Recipe In Tamil
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, சாம்பார் என்று வைக்காமல், இது போன்று காரசாரமாக மகாராஷ்டிரா மிளகாய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும், ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 5 காய்ந்த மிளகாய்
- 4-5 பூண்டு
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
செய்முறை
- முதலில் மிக்சியில் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பின் அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.
- பின்பு ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பிறகு அதை சட்டினியுடன் சேர்த்து கலந்தால் மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி தயார்.