- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast
குழந்தைகளுக்கு மேகி பாஸ்தா நூடுல்ஸ் அப்படின்னு சொன்னாலே ஒரே குஷி ஆயிடும். அதுக்கு காரணம் குழந்தைகளுக்கு இந்த ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஆனா குழந்தைகளுக்கு அடிக்கடி இதை செஞ்சு கொடுக்காம எப்பவாவது ஒரு தடவை செஞ்சு கொடுக்கிறது தான் நல்லது. ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. ஆனா குழந்தைகள் அடம் பிடிச்சு கேட்கும் போது எப்பவாவது ஒரு தடவை நிறைய காய்கறிகள் எல்லாம் சேர்த்து சூப்பரான மேகி செஞ்சு கொடுக்கலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம சில்லி பன்னீர் மாதிரி தான் செய்யப் போறோம்.
இதை குழந்தைகளோட பிரேக்ஃபாஸ்ட் லஞ்ச் டின்னர்னு எல்லாத்துக்குமே செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களுக்குமே மேகினால் ரொம்ப பிடிக்கும் அதனால வீட்டுல இருக்கக்கூடிய எல்லாருமே இந்த சில்லி பன்னீர் மேகியை விரும்பி சாப்பிடுவாங்க. இதுல பன்னீர் வெங்காயம், குடைமிளகாய் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் முட்டையும் சேர்த்துக்கோங்க இல்லனா முட்டைய தவிர்த்துக்கோங்க.
இந்த காய்கறிகள் சேர்த்தாலே டேஸ்ட்டு சூப்பரா இருக்கும். அதுவும் இதுல பன்னீர் சேர்க்கிறதால டேஸ்ட் இன்னும் கொஞ்சம் சூப்பராவே இருக்கும். இதுல நிறைய சாஸ் சேர்த்து செய்றதால டேஸ்ட் சைனீஸ் ரெஸ்டாரன்ட்ல சாப்பிடுற மாதிரியே ஒரு ஃபீல் இருக்கும். அந்த அளவுக்கு ருசியான இந்த சில்லி பன்னீர் மேகி குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை மட்டும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
சட்டுனு ஏதாவது ஒரு ரெசிபி செய்யணும் அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டுரலாம். ஆனா அடிக்கடி செய்யாமல் மட்டும் பார்த்துக்கோங்க. மாசத்துல ஒரு தடவை செய்யறது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனா இதோட டேஸ்ட் உங்கள திரும்ப திரும்ப செய்ய வச்சுக்கிட்டே இருக்கும். அந்த அளவுக்கு ருசியாவே இருக்கும். இப்ப வாங்க குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச டேஸ்டான சில்லி பன்னீர் மேகி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
மேகியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பெரிய வெங்காயம் பன்னீர் குடைமிளகாய் அனைத்தையும் சதுர வடிவில் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் தக்காளி சாஸ் சோயா சாஸ் வினிகர் சில்லி சாஸ் சில்லி பிளேக்ஸ் மிளகுத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த மேகியை சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான சில்லி பன்னீர் மேகி தயார்.






