சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

அனைவரும் தேங்காய் பால் அருந்துவதால் அதில் அதிக கொழுப்பு உள்ளது மற்றும் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றார்கள் அது முற்றிலும் தவறான விஷயம். விலங்குகளிடமிருந்து நாம் எடுக்கும் பால்களை விட தேங்காய் பாலில் உள்ள கொழுப்பின் அளவு ஆனது மிகவும் குறைவுதான். அதுமட்டுமில்லை ஆரோக்கியமான சத்துக்கள் அதிகம் கொண்டது

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை மசாலா சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

தேங்காய் பால் சாப்பிடுவதனால் உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்கும் மற்றும் இளைஞர்கள் தினமும் ஒரு டம்ளர் தேங்காய் பால் அருந்துவதால் நம் உடலுக்கு தேவையான அதே இரும்பு சத்து கிடைக்கும். இவ்வளவு பயனுள்ள தேங்காய் பாலை வைத்து தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

Print
5 from 1 vote

தேங்காய் பால் சாதம் | Coconut Milk Sadam Recipe in Tamil

அனைவரும் தேங்காய் பால் அருந்துவதால் அதில் அதிக கொழுப்பு உள்ளது மற்றும் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றார்கள் அது முற்றிலும் தவறான விஷயம். விலங்குகளிடமிருந்து நாம் எடுக்கும் பால்களை விட தேங்காய் பாலில் உள்ள கொழுப்பின் அளவு ஆனது மிகவும் குறைவுதான். அதுமட்டுமில்லை ஆரோக்கியமான சத்துக்கள் அதிகம் கொண்டது தேங்காய் பால் சாப்பிடுவதனால் உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்கும் மற்றும் இளைஞர்கள் தினமும் ஒரு டம்ளர் தேங்காய் பால் அருந்துவதால் நம் உடலுக்கு தேவையான அதே இரும்பு சத்து கிடைக்கும். இவ்வளவு பயனுள்ள தேங்காய் பாலை வைத்து தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast
Cuisine: Indian, TAMIL
Keyword: COCONUT MILK RISE, தேங்காய் பால் சாதம்
Yield: 4
Calories: 30kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் அரிசி
  • 4 கப் தேங்காய் பால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 TBSP இஞ்சி பூண்டு விழுது
  • 3 PIECE பட்டை
  • 3 PIECE லவங்கம்
  • 3 PIECE ஏலக்காய்
  • ½ TBSP கரி மசால் பொடி
  • நெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • புதினா தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • கருவேப்பிலை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தேங்காய் பால் சாதம் செய்வதற்கு முக்கியமாக தேவைப்படும் தேங்காய் பாலை தயார் செய்வது பற்றி பார்க்கலாம் முதலில் 2 தேங்காயை எடுத்து உடைத்து தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின்னர் தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின்பு மிக்ஸியில் அரைத்த தேங்காயை வடிகட்டி அதிலிருந்து நாலு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • முதலிலேயே அரிசியை இரண்டு முறை தண்ணீரில் அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள் அப்படி ஊறவைத்த. பின்பு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வெட்டிக் கொள்ளுங்கள் மற்றும் கொத்தமல்லியையும் புதினாவையும் சாதத்திற்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை சூடேறியுடன் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் புதினா சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் தேங்காய் பால் கறிமசால் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • அடுத்து தேங்காய் பால் கொதித்தவுடன் குக்கரில் அரிசியை சேர்த்து இரண்டு விசில் வரும் வரை மூடி வைத்து விடுங்கள். இரண்டு விசில் வந்தவுடன்.
  • குக்கரை இறக்கி அதில் உள்ள பிரஷர் இறங்கும் வரை காத்திருங்கள் பிரேஷர் இறங்கியவுடன் சிறிதளவு மேல் நெய் உற்ற கொத்தமல்லியை தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் சாதம் இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4PERSON | Calories: 30kcal | Carbohydrates: 12.9g | Fat: 3.2g | Sodium: 2mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here