- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast, evening
கேக் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று அதுவும் சுவையான கேட்கின்றால் யாருக்கு தான் பிடிக்காது என்பார்கள். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பான்கேக். அமெரிக்காவின் பாரம்பர்ய உணவான பான் கேக் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத் தோன்றிய உணவு என்று கூறப்படுகிறது. பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன.
இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம். செய்முறை மற்றும் டாப்பிங் மாறுபட்டாலும், பான்கேக்குகள் உலகம் முழுவதுமே பிரபலமான ருசியான ஒரு உணவுப்பண்டமாகும். பொதுவாகவே பேன் கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாகவும் இருக்கின்றது எனலாம்.
மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு பான்கேக் செய்து கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது.
இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே தேங்காய் பான்கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த பான்கேக் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான தேங்காய் பான்கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நேந்திரம் பழம் கேக் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு, நாட்டு சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதன்பிறகு வெண்ணிலா எசன்ஸ், தேங்காய் பால், தேன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பான்கேக் தயார்.






