- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மக்காச்சோளம் வைத்து ஒரு சூப்பரான கட்லட் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகள் ஈவினிங் டைம்ல ஏதாவது செஞ்சு தர சொல்லி கேட்டாங்கன்னா இந்த ஆரோக்கியமான கட்லட் ரெசிபியை செய்து கொடுங்கள். மக்காச்சோளமும் உருளைக்கிழங்கும் வைத்தா செய்ற இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான கட்லட் ரெசிபில நம்ம பிரட் கிரம்ஸ் சேர்த்து செய்ய போறோம் அது நல்லா மொறு மொறுன்னு சூப்பரா இருக்கும் பிரட் கிரம்ஸ் இல்ல அப்படின்னா ரவை கூட சேர்த்து செய்யலாம். ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு நல்லா வேக வச்சு மசிச்சு சேர்க்கணும் மக்காச்சோளத்தை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்வளவு டேஸ்டா இருக்கும். கூட தக்காளி சாஸ் மையோனைஸ் இதெல்லாமே வச்சு சாப்பிட்டால் அட்டகாசமாக ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுற மாதிரியே இருக்கும். என்ன தான் நிறைய கட்லட் ரெசிபி இருந்தாலும் இது ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான மக்காச்சோளம் உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய சூப்பரான கட்லட் ரெசிப்பி ஈவினிங் டைம்ல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் மக்காச்சோளத்தை சேர்க்கவும் நறுக்கிய பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மசித்து சேர்த்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், சாட் மசாலா, பிரட் கிரம்ஸ், கரம் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து வட்ட வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மக்காச்சோள கட்லட் தயார்.






