- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மக்காச்சோளத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் சிம்பிளான கார்ன் ஃப்ரை செய்து கொடுங்கள். பொதுவாக நாம் பலவிதமான மாலை நேர சிற்றுண்டிகளை செய்து சுவைத்திருப்போம். அதில் சில சிற்றுண்டிகள் நமக்கு அலுத்தே போயிருக்கலாம். அதனால் நாம் இன்று இங்கு ஒரு வித்தியாசமான கார்ன் ஃப்ரை என்கிற மாலை நேர சிற்றுண்டியை காண இருக்கிறோம்.
நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிக்கு இவை ஒரு அருமையான மாற்று என்றால் அது மிகை அல்ல. இந்த கார்ன் ஃப்ரையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் சோள விதைகள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சில மசாலா பொருட்கள் வைத்தே செய்து விடலாம். அது மட்டுமின்றி இவை செய்வதற்கும் மிகவும் எளிமையானவையும் கூட. மேலும் இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது.
நம் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது நாம் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். இந்த கார்ன் ஃப்ரையை குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இப்போது சுவையான கார்ன் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காலிபிளவர் எக் பெப்பர் ஃப்ரை
Ingredients
Method
முதலில் கார்னை வேகவைத்த எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை நீள துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஆம்சூர் பவுடர், சாட் மசாலா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கார்ன் ஃப்ரை தயார்.






