- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- snacks
இப்ப இருக்குற குழந்தைகளுக்கு பீட்சா பர்கர் பிரெஞ்ச் ப்ரைஸ் மேகி நூடுல்ஸ் அப்படின்னு இந்த மாதிரி உணவுகள் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த உணவுகளை தான் இப்ப இருக்குற குழந்தைகள் விரும்பி சாப்பிடுறாங்க ஆனா இந்த உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கக் கூடாது ஆனாலும் கூட பீட்சாவில் சேர்க்க கூடிய சீஸ் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதனால எப்பவாவது ஒரு தடவை குழந்தைகளுக்கு இதை கடைல வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே செஞ்சு கொடுக்கலாம்.
அதுக்கு நீங்க மாவு பெசஞ்சு கஷ்டப்படணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் அஞ்சு துண்டு பிரட் இருந்தா போதும். சூப்பரான பீட்சா பைட்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாம். இதை குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம் பிரேக் பாஸ்ட்க்கு கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கும் கூட கொடுக்கலாம். குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட இந்த இந்த மாதிரி அப்பப்போ ஏதாவது செஞ்சு கொடுங்க அந்த வகையில இந்த ரெசிபி குழந்தைகளோட ஃபேவரட் ரெசிப்பியாக மாறிடும்.
இது ரொம்ப ரொம்ப ருசியாவும் இருக்கும். கடைகளில் கிடைக்க கூடியதை விட வீட்ல செய்யக்கூடிய இந்த பைட்ஸ் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு மைக்ரோவேவ் ஓவன் கூட தேவையில்லை ஒரு கடாயிலையே சூப்பரா இதை செஞ்சு முடிச்சிடலாம். தோசை கல்லிலேயே செய்யலாம் ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி தான். இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களும் அடிமையாகிடுவாங்க. ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த சுவையான கார்ன் பீட்சா பைட்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பேபி கார்ன் வச்சு என்ன செய்வது என்று தெரியலையா அப்போ இந்த மாதிரி ஒரு சூப்பரான பேபி கார்ன் பிரட்டல் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ் வேகவைத்த மக்காச்சோளம் சில்லி ஃபிளேக்ஸ் உப்பு, மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிரட்டை ரவுண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதில் தக்காளி சாஸ் மையோனைஸ் தடவி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மக்காச்சோள கலவையை வைத்து அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தோசை கல்லில் பட்டர் சேர்த்து அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை வைத்து மூடி போட்டு 15 நிமிடம் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கார்ன் பீட்சா பைட்ஸ் தயார்.






