- Advertisement -
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆனால் சோள மாவில் அல்வா செய்யலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் இந்த தொகுப்பில் சோள மாவில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
கான்பிளவர் அல்வா | Cornflour Halwa Recipe in Tamil
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆனால் சோள மாவில் அல்வா செய்யலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் இந்த தொகுப்பில் சோள மாவில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 4 People
Calories: 422kcal
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கான்பிளவர்
- 1 1/2 கப் சர்க்கரை
- 1 கப் பால்
- 1 கப் தண்ணீர்
- 6 பாதாம், முந்திரி
- 1/4 கப் நெய்
- உப்பு சிறிது
செய்முறை
- கான்பிளவர் மாவை 1கப் பால், 1/2 கப் தண்ணீர், சிறிது உப்பு, கலர் பவுடர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- சீனியை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- கொதித்ததும், கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை அதில் சேர்க்கவும்.
- இடைவிடாது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
- சிறிது கட்டியானதும் நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும்.
- பின்னர் முந்திரி பாதாம் சேர்க்கவும்.
- அல்வை தட்டில் ஊற்றி ஆறவிடவும், ஆறியதும் துண்டு போடவும். சுவையான கான்பிளவர் அல்வா ரெடி.
Nutrition
Serving: 300g | Calories: 422kcal | Protein: 8.1g | Fat: 4.5g | Fiber: 8.5g | Calcium: 90mg
- Advertisement -