பெண்களின் மாதவிடாய் காலத்தில் மருந்தாகும் அற்புத மூலிகை ஏலக்காய்!

- Advertisement -

ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி... ஜாதிக்காய் கண்ணழகி'ன்னு சும்மா எழுதித் தள்ளிட்டார்னா பார்த்துக்கோங்க.ஏலக்காய் இடையழகின்னு அர்த்தம் கேட்டா… காதல் போதையில எழுதிட்டார், அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்கக்கூடாதுன்னு பதில் வருது. ஏலக்காய்ல புரதம், கொழுப்பு, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், கார்போஹைட்ரேட்னு நிறைய சத்துகள் இருக்கு.

-விளம்பரம்-

5 ஆயிரம் ஆண்டாக சமையலில்

சர்வதேச அளவுல அதிக விலை மதிப்புள்ள மசாலாப் பொருள் ஏலக்காய். சுவைக்காகவும், மணத்துக்காகவும் பயன்படுத்தக்கூடிய ஏலக்காய்ல என்னென்ன மருத்துவ குணம் இருக்குன்னு நிறைய ஆராய்ச்சிகள் போய்க்கிட்டிருக்கு. சங்க காலம், மன்னர் காலம்னு 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்தே ஏலக்காயை சமையல்ல பயன்படுத்திட்டு வர்றாங்க. சிலபேருக்கு சாப்பிட்ட சாப்பாடு பல் இடுக்குகள்ல தேங்கி நாத்தம் எடுக்கும்; ஒழுங்கா மலம் கழியலைன்னாலும் வாய் நாறும். இதுக்கெல்லாம் ஒரு ஏலக்காய் போதும். இன்னும் சொல்லப்போனா ஒரு ஏலரிசி போதும். வாய்ல போட்டா அப்பிடி ஒரு மணம் மணக்கும்.

- Advertisement -

உயர் ரத்த அழுத்தம் வாய்வுக்கோளாறுக்கு நல்லது

ஏலக்காயோட மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். ஏலக்காயை அப்பப்போ பயன்படுத்திட்டு வந்தா உயர் ரத்த அழுத்தம் வராம பாத்துக்கிடலாம். இது ரத்தத்தை சுத்தப்படுத்துறதோட சிறுநீரை அதிகமா சுரக்க வச்சு உடல் கழிவுகளை அகற்றும். செரிமானத்துக்கு உதவுறதாலதான் ஏலக்காயை சமையல்ல சேர்க்கிறாங்க. வயித்துல உண்டாகக்கூடிய அல்சர், வாய்வு சம்பந்தமான பிரச்சினைகளை சரிபண்ணக்கூடியது ஏலக்காய். ஆன்டி ஆக்ஸிடன்ட்டும், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடக்கூடிய தன்மையும் இதுல இருக்கிறதால வாய் சுகாதாரத்தை பாதுகாக்கும்.

மலச்சிக்கல், அசிடிட்டி போக்கும்

ஏலக்காய்ல உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மனசை நிதானப்படுத்தும். கார்டிசால்ங்கிற ஹார்மோனை சுரக்கிறதால மன அழுத்தத்தைக் குறைச்சி சுவாசக்கோளாறை சரிபண்ணும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு ஏலக்காயை வெதுவெதுப்பான தண்ணில போட்டு குடிச்சிட்டு வந்தா நிம்மதியா தூங்கலாம். குறட்டைப் பிரச்சினை, மலச்சிக்கல், அசிடிட்டி, வாய்வுக்கோளாறுன்னு பல பிரச்சினைகளை சரிபண்ணும். அடிக்கடி முதுகு பிடிச்சாலோ, கழுத்து பிடிச்சாலோ, வயிறு இழுத்துப் பிடிச்சாலோ ஏலக்காய் சாப்பிட்டாலே போதும்.

புற்றுநோயை எதிர்க்கும்

ஏலக்காயோட மகிமையைப் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, இரைப்பு நோய், இதய நோய்னு பலவிதமான நோய்களால பாதிக்கப்பட்டவங்களுக்கும் ஏலக்காய் நல்லது. பருவகாலம் மாறும்போது சளி, இருமல், காய்ச்சல்னு பலவிதமான பாதிப்புகள் வரும். இதுக்கு ஒரு ஏலக்காய் டீ போட்டு குடிச்சா போதும். புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய தன்மை ஏலக்காய்க்கு உண்டு. ஒரு ஆராய்ச்சியில புற்று நோய் வராம தடுக்கிறதோட அந்த நோய் வராம தடுக்கவும், தள்ளிப்போடவும் ரொம்பவே உதவியா இருக்கு.

-விளம்பரம்-

அதிக ரத்தப்போக்கு நிற்கும்

மாதவிடாய் காலத்துல சில பெண்களுக்கு அதிகமா ரத்தம் போகும். இதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. பலபேர் இந்தப்பிரச்சினையால பாதிக்கப்பட்டு அதுக்காக என்னென்னவோ மருத்துவம் பார்த்தும் பலன் கிடைக்காத சூழல்ல ஏலக்காய் நல்ல தீர்வைத் தருது. அதாவது ஏலக்காயை நல்லா பொடியாக்கி நாட்டு வாழைப்பழத்தை தொட்டு தொட்டு சாப்பிட்டு வந்தா நிச்சயம் பலன் தரும். செலவே இல்லாத இந்த வைத்தியத்தை செஞ்சு பாத்து பலன் பெற்றவங்க நிறைய பேர் உண்டு. இவ்வளவு விசேஷ சக்திகளைக்கொண்ட ஏலக்காயை இனிமே பயன்படுத்துங்க, பலன்களைப் பெறுங்க. ஆனா, அளவோடு பயன்படுத்துங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here