- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பொதுவா சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா அதுல புளி சாதம், லெமன் சாதம் இல்லனா பழைய சாதம் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சு சாப்பிடுவோம். இட்லி மிதமாயிடுச்சு அப்படின்னா இட்லி உப்புமா செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இடியாப்பம் நம்ம செஞ்சது மிச்சம் ஆயிடுச்சு அப்படின்னா அது என்ன செய்றது அப்படி என்று ரொம்ப நாள் யோசிச்சு குழம்பி போய் இருக்கீங்களா. என்ன செய்ய முடியும் அப்படின்னு நினைச்சு அதை தூக்கிப் போட்டு இருக்கீங்களா ஆனா இனிமேல் அப்படி செய்யாதீங்க. இனிமேல் நீங்க செஞ்ச இடியாப்பம் வீணாகிடுச்சு அப்படின்னா அந்த இடியாப்பத்தை தூக்கி போடாம அதை வச்சு ஒரு சூப்பரான முட்டை இடியாப்பம் செஞ்சுடுங்க.
இந்த முட்ட இடியாப்பம் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். ஒருவேளை நீங்க இடியாப்பம் செஞ்சு முடிச்சிட்டு அதுக்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்யறது அப்படின்னு யோசிச்சாலும் இந்த மாதிரி ஒரு சூப்பரான முட்டை இடியாப்பம் செஞ்சுருங்க. இது பிரேக் பாஸ்ட்க்கு லன்சுக்கு டின்னருக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். சின்ன குழந்தைகளுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா சாப்பிட்டு முடித்துவிட்டு டிபன் பாக்ஸ் காலியாக தான் கொண்டு வருவாங்க.
இந்த சூப்பர் டேஸ்டான ரெசிபிய கண்டிப்பா உங்க வீட்ல நீங்க செஞ்சு பாருங்க. இந்த முட்டையிடும் பத்துல நம்ம முட்டை வேக வெச்ச துருவி சேர்க்கிறதால டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். நல்லா காரசாரமா அங்கங்க முட்டை வந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாவே இருக்கும். இதுவரைக்கும் நீங்க ஒரு தடவை கூட இந்த மாதிரி ஒரு முட்ட இடியாப்பம் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இந்த சூப்பர் டேஸ்டான முட்டை இடியாப்பத்தை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இடியாப்பம் ப்ரை, காலை மதியம் இரவு என எந்த வேலைகளில் வேணாலும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்!!!
Ingredients
Method
முதலில் முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்து துருவி வைத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலை பொடியாக நறுக்கிய பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து பொரிந்ததும் துருவி வைத்துள்ள முட்டையுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
மற்றொரு பெரிய கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
துருவி வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை இடியாப்பம் தயார்.






