Advertisement
அசைவம்

காரசாரமான உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

இன்றைய காலத்தில் நாம் உணவுடன் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் சேர்க்காமல் கூட உணவுகளை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஆனால் முட்டை இல்லாமல் சாப்பிடுவது கிடையாது அதிலும் குறிப்பாக அவித்த முட்டையை பெரும்பாலும் விரும்பாமல் ஆம்லெட், ஆப் ஆயில், கலக்கி என இது போன்று ரெசிப்பிகளை தான் பெரிதும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று நாம் உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நாம் பொதுவாக முட்டைகளை அவித்து அதை வைத்து தான் பெப்பர் ஃப்ரை செய்வோம் ஆனால் இன்று வித்தியாசமாக முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் செய்யப் போகிறோம் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த ரெசிபி இருக்கும். அதனால் உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை | Egg Pepper Fry Recipe in Tamil

Print Recipe
சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் சேர்க்காமல் கூட உணவுகளை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஆனால் முட்டை இல்லாமல் சாப்பிடுவது கிடையாது அதிலும் குறிப்பாக அவித்த முட்டையை பெரும்பாலும் விரும்பாமல் ஆம்லெட், ஆப் ஆயில், கலக்கி என இது போன்று ரெசிப்பிகளை தான் பெரிதும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று நாம் உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக முட்டைகளை அவித்து அதை வைத்து தான் பெப்பர் ஃப்ரை செய்வோம் ஆனால் இன்று வித்தியாசமாக முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் செய்யப் போகிறோம்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Egg, முட்டை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 136

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரக தூள்
  • 1 ½ tbsp மிளகு தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • ¼ கப் தண்ணீர்
  • 5 முட்டை

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்
    Advertisement
    ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போகும் வரை வதக்கி பின் இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் கால் டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். மசலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  • பின் கிரேவி ஒரு கொதி வந்ததும் இதனுடன் நாம் வைத்திருக்கும் ஐந்து முட்டைகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு உடைத்து ஊற்றி கிளறி விடாமல் அப்படியே கடாயை மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் நம் உடைத்து ஊற்றிய முட்டைகளை அதன் சுற்றியுள்ள பகுதிகளை துண்டு துண்டாக வெற்றி விட்டு முட்டைகளை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை பெப்பர் ப்ரை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 136kcal | Carbohydrates: 7g | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 0.2g | Cholesterol: 3mg | Sodium: 2mg | Potassium: 189mg | Fiber: 2g | Sugar: 1g | Calcium: 10mg | Iron: 1.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

1 மணி நேரம் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

14 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

16 மணி நேரங்கள் ago