- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் முட்டை வைத்து சுவையான பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
அதுலயும் வீட்டில் செய்த பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இதையே செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் முட்டை பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளைத் தாண்டி சாட் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப காலத்தில் உடனடியாக தயாராக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது.
தற்போது அந்த துரித உணவுகளைச் சத்தான உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நமக்கு வந்துவிட்டது. அந்த வகையில் உடலுக்குச் சிக்கல்களைத் தராத உடனடியாக செய்யக்கூடிய இந்த முட்டை பீட்சா சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெசிபியை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் எப்பவுமே நீங்கள் இந்த ரெசிபியை தான் செய்து சாப்பிடுவீர்கள். இப்போது சுவையான முட்டை பீட்சா சாண்ட்விச் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதாவது செய்ய விரும்பினால் இந்த வெஜிடபிள் வடை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் பிரெட் துண்டுகளின் ஓரத்தை நறுக்கி விட்டு முக்கோணமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்க்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை முட்டை மேல் வைத்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும். அதன்பிறகு முட்டையை திருப்பி போட்டு அதன்மேல் பீட்சா சாஸ் தடவவும்.
பின் அதன்மேல் வட்டமாக நறுக்கிய தக்காளி, குடைமிளகாய் வைத்து சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங், சீஸ் தூவி மூடி வைத்து வேக விடவும்.
சீஸ் நன்கு உருகி வந்ததும் எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான முட்டை பீட்சா சாண்ட்விச் தயார்.






