இந்த உணவுகளை காலையில் சாப்பிடுவதற்கு முன் நன்றாக சிந்தித்து கொள்ளுங்கள்!

- Advertisement -

நம் முன்னோர்கள் எப்போதும் காலையில் சாப்பாட்டை மட்டும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பதை எப்பொழுதும் அறிவுறுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஏனென்றால் நம் இரவில் சாப்பிட்ட பின் வெகு நேரம் தூங்குவதால் நாம் இரவு சாப்பிட்ட சாப்பாடு அனைத்தும் செரிமானமாகி இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் நம் காலையில் சாப்பாடாடை தவிர்க்கும் போது மயக்கம் மற்றும் தலை சுற்றுதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடிய உணவுப் பொருள்கள் இருந்தாலும் நம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று சில உணவுப் பொருட்களும் இருக்கின்றன அதை இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-
Banana

வாழைப்பழம்

வாழைப்பழம் நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் தவிர்க்க வேண்டியது. ஏன் வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும் என்றால். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் போன்ற பல விதமான வேதிப்பொருள் நமது இரைப்பையில் இருக்கும் நொதி பொருட்களுடன் சேரும்பொழுது நமக்கு இரைப்பை அலர்ஜி வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும்.

- Advertisement -

சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள்

நாம் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் அல்லது பல சாறுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் முக்கியமாக சிட்ரஸ் அமிலங்கள் உள்ள பழங்களை தவிர்த்து விடுங்கள். ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரிக் அமிலங்கள் உள்ள பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த அமிலங்கள் நம் இரைப்பையில் உள்ள வேதிப்பொருட்களுடன் சேரும்போது இரைப்பை அலர்ஜி மற்றும் நீரழிவு நோய், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை நமக்கு ஏற்ப்படுத்தி விடும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிருங்கள். காலையில் வெறும் வயிற்றில் பால் பொருட்களை உட்கொள்ளுவதால் நமக்கு பெரிதாக எந்தவித பாதிப்பும் இல்லாதது உண்மைதான் ஆனால் நாம் காலையில் வெறும் வயிற்றில் பால் பொருட்களை சாப்பிடுவது நமது உடலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியத்தை சேர்க்காது. அதற்கு பதிலாக வேறு சத்து நிறைந்த ஆகாரங்களை சாப்பிடுங்கள். அதனால் முடிந்தளவு காலையில் வெறும் வயிற்றில் பால் பொருட்களை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

பேரிக்காய்

நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளில் பேரிக்காவும் ஒன்று. பேரிக்காய் நம் உடலுக்கு பல விதத்தில் பயனுள்ளதாக இருந்தாலும் பேரிக்காயை காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றுப் பகுதியில் இருக்கும் மென்மையான ஜவுக்களை சேதப்படுத்தும் மேலும் பேரிக்காயை சாப்பிடுவதால் உங்கள் இரைப்பை மற்றும் குடல் பகுதி திசுக்களை சேதப்படுத்தவும் ஆனால காலை சாப்பாட்டிற்கு பிறகு நீங்கள் பேரிக்காயை ஒரு இனிப்பாக சாப்பிட்டு கொள்ளலாம்.

-விளம்பரம்-

சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகள்

நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய உணவுகளில் சாக்லேட் மற்றும் இனிப்பு பொருட்களும் ஒன்றுதான். நீங்கள் காலையில் சாக்லேட் ,இனிப்பு வகை பொருட்களை வெறும் வயிற்றிலே சாப்பிடும் பொழுது உங்கள் உடலில் இருக்கும் இன்சுலின் சமநிலையை பாதிக்கும். நம் உடலில் இன்சுலின் எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம் மேலும் வெறும் வயிற்றில் சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்பட அதிகளவு வாய்ப்பு உள்ளது.

Carbonated drink poured into a glass.

கார்புனற்றப்பட்ட குளிர்பானங்கள்

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களும் உண்டு. நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களான கோக், பெப்சி, 7அப் போன்ற கேஸ் அதிகம் உள்ள குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் உங்களுக்கு வயிற்று பகுதியில் வயிற்று எரிச்சல், வயிற்று வலி, மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் சார்ந்த உபாதைகள் ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பதும் நல்லதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here