முகப்பரு, முடி உதிர்தல், மூல நோய் போன்றவற்றை சரி செய்யும் நம் வீட்டில் இருக்கு மருந்துவ பொருள்!

- Advertisement -
  • வெந்தயம்… அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய முக்கியமான பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்துன்னு பலவிதமான சத்துகள் நிறைஞ்ச வெந்தயத்துக்கு மருத்துவ குணம் அதிகம் இருக்கு. துவர்ப்புத்தன்மை உள்ள வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது. சிறுநீரை பெருக்கக்கூடிய தன்மை உள்ள வெந்தயம் மூலநோய், முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத் தொல்லைன்னு பல நோய்களை விரட்டுறதுக்கு உதவியா இருக்கும். வெந்தயத்தை பலவிதங்கள்ல சாப்பிடலாம். இந்தமாதிரி சாப்பிட்டு வந்தா பலவிதமான நோய்கள் சரியாகும், வராமலும் பார்த்துக்கிடலாம்.

மலச்சிக்கல் நீங்கும்

வெந்தயத்தை மோர்ல ஊறவச்சி காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல்னு எல்லாம் சரியாயிரும். வயிற்றுக் கடுப்பு அதாவது சீதபேதி பிரச்சினை இருந்தா வெந்தயத்தை இளநீர்ல ஊறவச்சி அரைச்சு குடிச்சா அந்தப்பிரச்சினை சரியாயிரும். அதேமாதிரி வெந்தயத்தை வாழைப்பழத்துக்கு உள்ளே வச்சி ராத்திரி முழுக்க பனியில வச்சி காலைல எடுத்துச் சாப்பிட்டாலும் சீதபேதி பிரச்சினை சரியாயிரும். வெந்தயம் மலச்சிக்கல் பிரச்சினையையும் சரிபண்ணும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி அரை ஸ்பூன் வெந்தயத்தை வாயில போட்டு தண்ணி குடிச்சிட்டு படுத்தா மலச்சிக்கல் மட்டுமில்லாம பலவிதமான பிரச்சினைகள் சரியாகும்.

-விளம்பரம்-

மாதவிடாய்க்கோளாறு

பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க்கோளாறுகளை சரிபண்றதுக்கும் வெந்தயம் ரொம்பவே உதவியா இருக்கும். முக்கியமா மாதவிடாய் காலத்தில வரக்கூடிய வயிற்றுவலி, இடுப்புவலின்னு பல பிரச்சினைகள் சரியாகும். வெள்ளைப்படுதல், வெட்டை நோய்னு நிறைய பிரச்சினைகளை சரிபண்ணும். வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தா இந்தப்பிரச்சினைகள் எல்லாம் சரியாயிரும். அதே மாதிரி வெந்தயத்தை கசாயம் பண்ணி குடிச்சிட்டு வந்தாலும் சரியாயிரும்.

- Advertisement -

உடல் சூடு குறையும்

வெந்தயத்தை தயிர் சேர்த்து ராத்திரி ஊற வச்சி காலையில எழுந்ததும் அதை நல்லா மையா அரைச்சு உடம்புல தேய்ச்சிக் குளிச்சா உடம்புல உள்ள கத்தாழை நாத்தம் சரியாயிரும். இதை அரைச்சி தலையில தேய்ச்சி குளிச்சிட்டு வந்தா முடி உதிர்தல் பிரச்சினை சரியாயிரும். கண்கள் குளிர்ச்சியாகுறதோட மண்டைச்சூடு குறையும். பேன் தொல்லை, பொடுகுத்தொல்லை, அரிப்புன்னு பலவிதமான பிரச்சினைகள் சரியாயிரும். வெந்தயத்தை அரைச்சி மாவாக்கி களி கிண்டி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும். முகப்பரு, கொப்புளம் இருக்கிறவங்க இதை அரைச்சி பூசிட்டு வந்தாலும் பிரச்சினை சரியாயிரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here