காய்ச்சலை விரட்டும் மிளகு கசாயம், கறிவேப்பிலை குடிநீர் செய்வது எப்படி ?

- Advertisement -

இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. சித்தர் பெருமக்கள் சும்மா ஒன்றும் சொல்லிவிட்டு போகவில்லை… நமது வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய மிளகைக் கொண்டே காய்ச்சலை சரிசெய்துவிட முடியும். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் போய்கூட உணவு உண்ணலாம் என்று ஒரு மருத்துவ பழமொழி உள்ளது. அது ஒருபுறமிருக்க மிளகைக்கொண்டு காய்ச்சலை விரட்டிவிட முடியும். காய்ச்சலை விரட்ட மிளகை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-


மிளகு கசாயம்


முதலில் பத்து மிளகை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை எண்ணெய் விடாமல் வறுத்து எடுக்க வேண்டும். முக்கியமாக மிளகு நன்றாக கருகுமளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அதை அடுப்பிருந்து இறக்கி சூடு ஆறியதும் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்றாகக் கொதித்து அது பாதிக்கும் குறைவாக வற்றியதும் அதை வடிகட்டிக் குடிக்க வேண்டும். பத்து மிளகென்றால் அது காரமாக இருக்குமே என்று சிலர் நினைக்கலாம். மிளகை வறுத்ததும் அதன் காரத்தன்மை குறைந்துவிடும். மிளகை நாம் உடைக்காமல் பயன்படுத்துவதால் அதன் காரம் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் எந்தச் சுவையும் இல்லாமல் இருக்கும். இந்தக் கசாயத்தை பிரச்சினையைப் பொறுத்து காலை, மதியம், மாலை, இரவு என குடித்தால் காய்ச்சல் சரியாகும். காய்ச்சல் சற்று தீவிரமாக இருந்தால் இரண்டு மணி நேரத்துக்கு ஒருதடவை குடித்தால் சரியாகிவிடும். இந்த மிளகு கசாயத்தை தயாரித்து குடித்து பலன் பெற்றவர்களின் பட்டியல் பெரிது.

- Advertisement -


கறிவேப்பிலை குடிநீர்


இதேபோன்று மிளகுடன் கறிவேப்பிலை சேர்த்து ஒரு பானம் தயார் செய்து குடிக்கலாம். அதுவும்கூட காய்ச்சலை விரட்டும். அதற்கு தேவையான பொருள்கள் என்னென்ன என்று பார்ப்போம். இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, மிளகு 5 எண்ணிக்கை, கால் ஸ்பூன் சீரகம், இஞ்சி சிறு துண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது. அதற்குப் பதில் வெந்நீர் சேர்த்து வடிகட்ட வேண்டும். அந்த வடிநீருடன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை அவ்வப்போது தயார் செய்து குடிக்க வேண்டும். இதை ஒருநாளைக்கு மூன்றுவேளை குடித்தாலே காய்ச்சல் பூரண குணமாகிவிடும். அந்த அளவுக்கு இந்த மருந்து விஷேசமானது.


இட்லி, கஞ்சி, தனியா துவையல்


இதுபோன்று மிகச்சாதாரணமாக மிகச் சாதாரணமாக காய்ச்சலை விரட்டிவிடலாம். காய்ச்சல் நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவுகளை உண்ண வேண்டும். மதிய வேளைகளில் நன்றாகக் குழைய வேக வைத்த கஞ்சியுடன் கொத்தமல்லி விதையை துவையல் செய்து சாப்பிட வேண்டும். அந்த துவையல் எப்படி செய்ய வேண்டுமென்றால் கைப்பிடி அளவு கொத்தமல்லி விதை, அதாவது தனியா. அதை வறுத்து எடுத்து அதனுடன் பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இது மாதிரி உணவுமுறையை அமைத்துக்கொண்டால் எத்தகைய காய்ச்சலும் சரியாகிவிடும்.

-விளம்பரம்-

எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here