- Advertisement -
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் இது போன்று நம் வீட்டிலேயே செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
பிரெஞ்சு ப்ரைஸ் | French Fries Recipe In Tamil
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் இது போன்று நம் வீட்டிலேயே செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு தேவையான அளவு
- எண்ணெய் பொரிக்க
- உப்பு தேவையான அளவு
- தக்காளி சாஸ்
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்துக்கொள்ளவும்.
- படத்தில் இருப்பது போல் உருளைக்கிழங்கை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- ரொம்ப மெல்லிதாக இருந்தால் சுவை நல்ல இருக்காது.
- அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- அதிகம் கறிக்கிடாமல் பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
- கடைசியக அதன் மெல் சிறிது உப்பு தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.