பூண்டு சட்னி கேள்வி பட்டுருப்பிங்க அது என்ன பூண்டு புளி சட்னி அப்படின்னு யோசிக்கிறீங்களா. இந்த சட்னி ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். சுவையான இந்த சட்னியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் விடவே மாட்டீங்க அடிக்கடி செய்வீங்க. எப்பவுமே ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு செய்யாம இந்த மாதிரியும் ஒரு தடவ வித்தியாசமா சட்னி ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
சுவையான இந்த சட்னி ரெசிபியை எல்லாருமே விரும்பி சாப்பிடலாம். நல்லா புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். ருசியான இந்த சட்னி ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இதுல மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, சீரகத்தூள் எல்லாமே சேர்ப்பதால் வாசனை ரொம்பவே அருமையாக இருக்கும். டேஸ்ட்டும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே சாப்பிட வேண்டும்.
சுவையான சட்னி ரெசிபி இருந்தாலே இட்லி தோசை எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம். அந்த வகையில இந்த சட்னி ரெசிபியை வைத்து எத்தனை இட்லி தோசை வேணும்னாலும் சாப்பிடலாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். கடைசியா இதுல நம்ம நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கிறதால சாப்பிடும் போது கிரன்சியா ரொம்பவே சூப்பரா இருக்கும்.
இந்த டேஸ்டான ருசியான பூண்டு புளி சட்னி ஒரே ஒரு தடவை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரசாரமா சாப்பிட பிடிக்கிறவங்களுக்கு இந்த சட்னி ஃபேவரட் ஆன ஒரு சட்னி ஆகவே மாறிடும். இந்த சட்னி ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த வித்தியாசமான பூண்டு புளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பூண்டு புளி சட்னி | Garlic Puli Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 8 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- புளி பெரிய நெல்லிக்காய் அளவு
செய்முறை
- நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் மிளகாய் தூள் தனியா தூள் சீரகத்தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக இடித்து சேர்த்து வதக்கவும்.
- பிறகு கரைத்து வைத்த கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையான பூண்டு புளி சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பூண்டு துவையல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழம்பு தேவையில்லை ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம்!