வாய்வுத்தொல்லை முதல் மாரடைப்பு வரை குணமாக்கும் நம் சமையல் அறையில் இருக்கும் அற்புத மருந்து!

- Advertisement -

வெள்ளைப் பூண்டு.. இதை பூண்டு, பூடு, உள்ளின்னு பல பேர்ல சொல்வாங்க அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருட்கள்ல இதுவும் முக்கியமான ஒரு பொருள். பூண்டு ஒரு கிருமி நாசினியா செயல்படும். காலரா பரவக்கூடிய நேரத்துல பூண்டை அரைச்சி தண்ணியில கலந்து வீட்டு வாசல் பகுதியில தெளிச்சி விட்டா காலரா நம்மளை பாதிக்காது. அது மட்டுமில்ல பல பிரச்சினைகளை சரி பண்ணக்கூடியது பூண்டு. முக்கியமா சுவாசக் கோளாறு, செரிமானக் கோளாறு, வாய்வுத்தொல்லைன்னு பல பிரச்சினைகளை சரி பண்ணக்கூடியது.

-விளம்பரம்-

வாய்வுக்கோளாறு

அடிப்படையில வாய்வுக்கோளாறை சரி பண்றதுக்கு பூண்டு ரொம்பவே உதவியா இருக்கும். நிறைய பேர் பூண்டை பச்சையா சாப்பிடுறாங்க. அப்படி சாப்பிடுறதால குடல் பகுதியில பிரச்சினையை உண்டாக்குறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஆனா, முழு பூண்டைக்கூட சாப்பிடலாம். பச்சையா சாப்பிடாம தீயில சுட்டோ, வேக வச்சோ சாப்பிடலாம். சில பேருக்கு அவங்க சாப்பிடக்கூடிய சாப்பாடு முதுகுப்பகுதியிலயும், இடுப்புலயும் பிடிப்பை உண்டாக்க வாய்ப்பிருக்கு. அந்த மாதிரி நேரங்கள்ல வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிட்டா போதும். அடுத்த சில நிமிஷத்துல பலன் கிடைக்கும்.

- Advertisement -

பூண்டு ரசம் குழம்பு

வாய்வுக்கோளாறு சிலநேரங்கள்ல நெஞ்சுப் பகுதியில பிரச்சினையை உண்டாக்கும். சில பேர் இதை மாரடைப்புன்னு நினைச்சிக்கிடுவாங்க. ஏன்னா அந்த பாதிப்பு இதயக்கோளாறு மாதிரியே இருக்கும். எதுவா இருந்தாலும் அந்த மாதிரி நேரங்கள்ல வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிடலாம்; ரசம் வச்சி குடிக்கலாம். குழம்பு வச்சி சாப்பிடலாம். துவையல் செஞ்சிகூட சாப்பிடலாம். வெள்ளைப்பூண்டை நெய்யில வதக்கி காய்ஞ்ச மிளகாய், கொஞ்சம் புளி, உப்பு சேர்த்து அரைச்சா பூண்டுத்துவையல் ரெடி.

பூண்டுப்பால்

வெள்ளைப்பூண்டை பால், தண்ணி சேர்த்து வேகவச்சி மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்து கடைஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடலாம். இந்த மாதிரி சாப்பிட்டு வந்தா சளித்தொல்லை சரியாகும். சிலபேருக்கு நெஞ்சுல சளி கட்டிக்கிட்டு மூச்சுவிட முடியாம ராத்திரி தூங்கவும் முடியாம ரொம்ப சிரமப்படுவாங்க. அந்தமாதிரி நேரங்கள்ல இந்த பூண்டுப்பால் அற்புதமா வேலை செய்யும். இதை சாப்பிடுறதால மலச்சிக்கல் பிரச்சினைகூட சரியாகும். சின்னக்குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லோருமே இந்த பூண்டுப்பாலை குடிக்கலாம். இதை ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடுறதுதான் நல்லது.

மாரடைப்பு

பூண்டை இந்தமாதிரி பலவிதங்கள்ல சாப்பிட்டு வந்தா மாரடைப்புன்னு சொல்லக்கூடிய இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், ரத்தக்குழாய்ல கொழுப்பு படியக்கூடிய பிரச்சினைன்னு எல்லாத்துக்கும் ரொம்ப நல்லது. இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறவங்களும் சாப்பிடலாம். அப்படி ஒரு பிரச்சினை வராம இருக்கணுன்னா இதை முன்கூட்டியே சாப்பிடுறது நல்லது. சிலபேர் பூண்டு வாசனை பிடிக்கலன்னு அதை பயன்படுத்துறது இல்லை. இத்தனை மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டோட மகிமையை தெரிஞ்சா இனிமே யாருமே அதை ஒதுக்கமாட்டாங்க.

-விளம்பரம்-

ஒருதலைப்பூண்டு

வழக்கமா நாம சமையல்ல பயன்படுத்தக்கூடிய பூண்டைப்பத்தித்தான் இதுவரைக்கும் சொன்னோம். ஒருதலைப்பூண்டுன்னு ஒண்ணு இருக்கு. அதை ஒத்தப்பல் பூண்டுன்னுகூட சொல்வாங்க. அதாவது பூண்டுல நிறைய சுளைகள்… பற்கள் இருக்கும். சிலபேர் இதை பூண்டு அரிசின்னுகூட சொல்வாங்க. ஆனா, ஒருதலைப்பூண்டுல ஒரே அரிசிதான் இருக்கும். இதை சாப்பிட்டா ஒற்றைத் தலைவலி உள்பட பல பிரச்சினைகள் சரியாகும். மலைப்பூண்டுன்னு ஒண்ணுகூட இருக்கு. அதையும்கூட நாம பயன்படுத்தலாம். எல்லாத்துக்கும் மருத்துவ குணம் இருக்கத்தான் செய்யுது. அதனால வெள்ளைப்பூண்டை பயன்படுத்தி நோய்கள்ல இருந்து விடுபடுவோம்.

  • எம்.மரியபெல்சின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here