- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம்.
இதனை பிரட் அண்ட் சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
வேலைக்கு செல்பவர்கள் கூட பிரெட், ஜாம் வைத்து காலை உணவு சாப்பிடுவர். பிரெட், ஜாம் சுலபமான காலை உணவாகி விடுகிறது. அந்தவகையில் சந்தைகளில் கிடைக்கும் ஜாம்களில் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்கின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எளிதாக வீட்டிலேயே நெல்லிக்காய் ஜாம் செய்யலாம். நெல்லிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு சிறந்த பழமாகும். இதைப் பயன்படுத்தி எப்படி ஜாம் செய்வது என்பதைத்தான் இப்ப பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த ஜாம் செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை தயாரித்து சுமார் நான்கு வாரங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். தோசை சப்பாத்தி பிரட் போன்றவற்றில் தொட்டு சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும். நீங்கள் கடைகளில் தேவையில்லாத ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஜாமை வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்றால், ஒருமுறை இதை வீட்டிலேயே செய்து முயற்சித்துப் பாருங்கள். இப்போது சுவையான நெல்லிக்காய் ஜாம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
Ingredients
Method
முதலில் நெல்லிக்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் இதன் கொட்டைகளை அகற்றி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும்.
பின் வெல்லம் சேர்த்து கைவிடாமல் பத்து நிமிடம் நன்கு கலந்து விடவும். பின் ஏலக்காய் தூள், பட்டை தூள் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேகவிடவும்.
அதன்பிறகு இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி ஆற விடவும். இது நன்கு ஆறியதும் தேன் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் ஜாம் தயார்.






