- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- sweets
ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி அப்படின்னு வரிசையா இந்த மாசம் நிறைய பண்டிகைகள் வருது இந்த பண்டிகைகளுக்கு உங்க வீட்ல எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா கடலை மாவு தேங்காயும் வச்சு சூப்பரான ஒரு ஸ்வீட் செய்யுங்க. அந்த ஸ்வீட்டை நம்ம லட்டு மாதிரியும் சாப்பிடலாம் இல்லனா மைசூர் பாக் மாதிரி சதுர வடிவதிலும் செய்யலாம். இதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். கடலை மாவு வச்சு மைசூர் பாவ் செஞ்சுருப்போம். ஆனால் இப்பொழுது நம்ம செய்யப் போற இந்த ஸ்வீட்ல கடலைமாவும் தேங்காயும் வச்சு செய்யப் போறோம்.
உங்களுக்கு தேவைப்பட்டா இதெல்லாம் நெய் சேர்த்துக்கோங்க அப்படி இல்லனா வாசனை இல்லாத எண்ணெய் சேர்த்துக்கோங்க. சுவை ரொம்பவே சூப்பரா இருக்கும். டேஸ்ட் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. இந்து தீபாவளிக்கு ஒரே மாதிரியா ஸ்வீட் செய்யாம இந்த சூப்பரான ஸ்வீட்ட செஞ்சு பாருங்க.
விருந்தாளிகள் வீட்டுக்கு வரும்போது அவங்களுக்கு இந்த ஸ்வீட்ட சீக்கிரமா செஞ்சு கொடுத்துடலாம். இந்த ஸ்வீட் செய்யறதுக்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். கடைசியா உங்களுக்கு விருப்பமான நட்ஸ் வகைகளை பொடியாக்கி சேர்த்துக்கலாம். சுவையில் இந்த சூப்பரான ஸ்வீட்டா அடிச்சுக்கவே முடியாது. இப்ப வாங்க இந்த சுவையான கடலை மாவு வச்சு செய்யக்கூடிய சூப்பரான ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் கடலை மாவை சல்லடையில் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.
பிறகு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்று அரைத்துக் கொள்ளவும்.
அதனையும் கடலை மாவுடன் சேர்த்து நன்றாக கிளறி சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
நெய் பிரிந்து தனியாக வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கி அதன் மேல் பொடியாக்கிய முந்திரி பாதாம் சேர்த்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் செய்து எடுத்துக் கொள்ளவும் பொழுது சுவையான கடலை மாவு ஸ்வீட் தயார்.






