- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு பக்கோடா. இது வரை பச்சை பட்டாணி வைத்து புலாவ், கிரேவி கட்லெட் செய்திருப்பீர்கள்.
ஆனால் சற்று வித்தியாசமாக பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு வைத்து பக்கோடா செய்து பாருங்கள் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். பொதுவாக மாலை வேளையில் டீ காபி ஓட ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று நினைப்போம். ஆனால் கடையில போய் அதுக்கு ஸ்னாக்ஸ் வாங்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சா சூப்பரா இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ரெசிபியை செய்து பாருங்கள். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும்.
சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்டில் உள்ள சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை மாலை வேளையில் ஸ்னாக்ஸாக மட்டுமின்றி ஏதாவது சாம்பார் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதத்திற்கும் சைடு டிஷ் ஆக சாப்பிடலாம். ஒரே ஒரு தடவை செய்து பார்த்துவிட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இப்போது சுவையான இந்த பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அதனுடன் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு பக்கோடா தயார்.






